தற்போது கிரிக்கெட்டின் 3 வடிவங்களான டெஸ்ட், ஒருநாள், டி20க்களில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்தான் அசத்தி வருகிறார், ஆனால் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சனோ, ஆயிரம் சொன்னாலும் ஆயிரம் பேர் வந்தாலும் கோலி கோலிதான் என்று அறுதியிட்டு பேசியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக இருக்கிறார் பாபர் ஆசாம். மூன்று வடிவங்களிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஒரே பேட்டர் பாபர் அசாம்தான். ஆனால், பாபர் ஆசாம், விராட் கோலியுடன் ஒப்பிடுப்படுவதை நிராகரித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். ஐசிசி ரிவியூவில் இஷா குஹாவுடன் உரையாடிய ஷேன் வாட்சன், கோலியை சிறந்த டெஸ்ட் பேட்டராக தேர்வு செய்தார்.
ஆனால் விராட் கோலி இப்போது ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷேன் வாட்சன் என்ன கூறுகிறார் எனில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால், நான் எப்போதும் விராட் கோலியைத்தான் கூறுவேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரம்பை தக்க வைக்கும் அவரது திறமை, அனைத்து வடிவங்களிலும் அவர் தனது பன்முக பேட்டிங் திறமையை தொடர்ந்து பராமரிக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு செல்லும்போது ஒருவிதமான ஆக்ரோஷத்தை உங்களால் பார்க்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றால் தற்போது சிறந்தவர் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற அங்கீகாரத்தில் இருந்து வெளியேறிவிட்டார். சிறந்த ஃபார்மில் இருக்கும்போது அவர் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது போல் தெரியவில்லை. பாபர் அசாம் இப்போது நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது ஆட்டத்தை எப்படி மாற்றியமைத்துள்ளார் என்பதை நாம் பார்க்க வேண்டும். எனவே பாபர் அசாம் தற்போது நம்பர்-2 ஆக இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
கோலி இதுவரை 102 டெஸ்டில் விளையாடி 49.53 சராசரியில் 8074 ரன்களையும், பாபர் 42 டெஸ்டில் விளையாடி 47.30 சராசரியில் 3122 ரன்களையும் எடுத்துள்ளனர். கோலி சமீபத்தில் தான் டெஸ்ட்டில் 50 ரன்கள் சராசரிக்கும் கீழ் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, Steve Smith, Virat Kohli