• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோலி என்ற மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை இந்தியா பெற்றுள்ளது: ஷேன் வார்ன் உச்சம்

கோலி என்ற மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை இந்தியா பெற்றுள்ளது: ஷேன் வார்ன் உச்சம்

வெற்றிக் கொடி பிடிக்கும் விராட் கோலி.

வெற்றிக் கொடி பிடிக்கும் விராட் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன், உலகின் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் விராட் கோலியை ஆஸ்ட்ரேலியா ஜாம்பவான் ஷேன் வார்ன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மழையினால் வெற்றி வாய்ப்பை தவற விட்டது பிறகு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் 60 ஓவர்களில் இங்கிலாந்தை 120 ரன்களுக்குச் சுருட்டி வென்றது, மீண்டெழுந்த இங்கிலாந்து ஹெடிங்லேயில் இந்திய அணியை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது, ஓவல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் ஒரு கட்டத்தில் சமவாய்ப்பு இருந்தது, ஆனால் ஷர்துல் தாக்கூர், ரிஷப் பந்த் சதக்கூட்டணியினால் ஆட்டம் மாறிப்போனது, பிறகு 5ம் நாள் பும்ரா, ஜடேஜாவினால் வெற்றிக்கதவுகள் திறந்து இந்திய அணி 2-1 என்று டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஷேன் வார்ன் விராட் கோலியையும் இந்திய அணியையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்: “இந்திய கேப்டன் விராட் கோலி அணி வீரர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி ஊக்கமளிக்கிறார். கோலிக்கு அணியில் ஏகப்பட்ட மரியாதை. கோலிக்காக ஆடுகின்றனர், சக வீரர்களை அவர் நடத்தும் விதத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தருகிறார். கிரிக்கெட் உலகின் ஆற்றல் மிகுந்த நாடாக இந்தியா திகழ்கிறது. கோலி மூலம் உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆஸ்ட்ரேலியா சென்றாலும் வெல்வோம், இங்கிலாந்திலும் வெல்வோம் என்று சொல்பவர் கோலி. விளையாட்டில் எப்பவும் தன்னம்பிக்கை மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை இல்லையெனில் எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் சரிவராது.

    கோலி தன் சிறப்பான வழிநடத்துதல் மூலம் சக வீரர்களுக்கு வெற்றி நம்பிக்கையூட்டுகிறார். கோலி இருக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட் சாகாது, நீண்ட நாட்களுக்கு ஆடுங்கள் விராட்” என்று உணர்ச்சிமயத்துடன் கூறியுள்ளார் ஷேன் வார்ன்.

    Also Read: மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜியின் எமோஷனல் பதிவு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: