கோலி உலகின் சிறந்த வீரர் அல்ல, வழக்கமான ஆசிய வீரரே- பாக். முன்னாள் பவுலர் விமர்சனம்

விராட் கோலி.

இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் மட்டுமல்ல கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு வடிவத்திலும் சதம் எடுக்காமல் சொதப்பி வருகிறார் விராட் கோலி. ஸ்விங் பந்துகளைக் கணிக்க முடியாமல் அவுட் ஆகி வருகிறார்.

 • Share this:
  இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் மட்டுமல்ல கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு வடிவத்திலும் சதம் எடுக்காமல் சொதப்பி வருகிறார் விராட் கோலி. ஸ்விங் பந்துகளைக் கணிக்க முடியாமல் அவுட் ஆகி வருகிறார்.

  விராட் கோலி போராடுவது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் துல்லியமான விமர்சனத்தை முன் வைத்தார்.

  சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்த கோலி.


   

  விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். லீட்சில் அன்று அரைசதம் எடுத்து வெளியே செல்லும் பந்தை நோண்டி அவுட் ஆனார்.

  Also Read: நம்ப முடிகிறதா?- வங்கதேசத்திடம் டெஸ்ட் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா- இதே நாளில் அன்று

  இந்நிலையில் பாக்டிவிக்கு ஆகிப் ஜாவேத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

  அகிப் ஜாவேத்.


  கோலி ஒரு ஆசிய வீரர். ஆசிய வீரர்களுக்கு ஸ்விங் பவுலிங்கை ஆட வராது, பந்து வந்த பிறகு ஆடுவதற்கு பதிலாக வெளியே போகும் பந்தை சேஸ் செய்து அவுட் ஆவார்கள், இந்த விதத்தில் கோலி ஒரு ஆசியவீரர்தான்.

  கோலி ஆஸ்திரேலியாவில் வேண்டுமானால் சிறப்பாக ஆடியிருக்கலாம், ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அவரால் ஆட முடியாது. அவர் பந்துகளை துரத்தி ஆட்டமிழப்பார், கட்டுப்பாடான ஸ்விங் பவுலிங்கில் கோலி வீழ்ந்துவிடுவார். அவரது மிகப்பெரிய பலவீனம் இது.

  மாறாக ஜோ ரூட்டின் மிகச் சிக்கனமான, இறுக்கமான டெக்னிக் அவரை கோலியை விட பாதுகாப்பான வீரராக்கியுள்ளது. ஜோ ரூட்டுக்கு பந்தை எப்படி தாமதமாக ஆடுவது என்பது தெரியும். மாறாக கோலி மட்டையை நீட்டி வெளியே போகும் பந்தை துரத்தி ஆட்டமிழக்கிறார், இந்த விதத்தில் அவர் ஒரு வழக்கமான ஆசிய வீரரே.

  என்கிறார் ஆகிப் ஜாவேத்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: