Home /News /sports /

அடுத்த சர்வதேச தொடர் : விராட் கோலி நீக்கம்?

அடுத்த சர்வதேச தொடர் : விராட் கோலி நீக்கம்?

virat kohli

virat kohli

தென்னாப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார், நீண்ட காலமாக விராட் கோலி பயோபபுள் எனும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார் என்று ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தென்னாப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார், நீண்ட காலமாக விராட் கோலி பயோபபுள் எனும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார் என்று ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

    ஐபிஎல் 2022 தொடர் மே மாதம் 29ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து 10 நாட்கள்தான் ஓய்வு, அதாவது 5 நாட்கள்தான் உண்மையில் ஓய்வு பிறகு ஜூன் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குவதால் 4ம் தேதி முதலே பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணி ஒன்று சேர வேண்டும். இந்நிலையில் கோலி அணியிலிருந்து நீக்கப்பட்டு அதை ஓய்வு என்று கூறுவார்கள் என்பது போல் செய்திகள் அடிபடுகின்றன.

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 20 ஓவர் போட்டி நடக்கிறது.ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்காக இருந்த கோலி தரைமட்டத்துக்குப் போய் 3 கோல்டன் டக்குகளுடன் இன்னும் ஹிட்விக்கெட், பீல்டரை தடுத்தல், ஹேண்டில்டு த பால், போன்ற வகையில்தான் அவுட் ஆகவில்லை மற்ற வழிகளில் அவுட் ஆகி மிகவும் சொதப்பி வருகிறார், தப்பாக ஆடி விட்டு, பந்து ஏதோ மாயாஜாலம் செய்தது போல் நின்று பார்த்து விட்டுச் செல்கிறார், முகத்தில் ஒரு புன்னகை தவழ, எனக்கேவா, என் கிட்டேயாவா? என்று வடிவேலு ஒருபடத்தில் பாயை விரிக்கத் திணறுவாரே அந்தப் பாணியில் புன்னகையுடன் ஒற்றை இலக்கத்தில் கோலி வெளியேறி வருகிறார்.

    ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவர்தான் இன்னமும் கிங். அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டும். பார்மில் இருக்கும் வீரருக்கே ஓய்வு தரக்கூடாது என்று கூறும் இந்தக் காலத்தில் பார்மில் இல்லாத வீரருக்கு எதற்கு ஓய்வு, ஆனால் கோலி ட்ராப் என்று தைரியமாக கூற முடியுமா? அதனால்தான் காயம், நிக்கிள், அதனால் ஓய்வு என்று கூறுவார்கள்.

    கோலி பல்வேறு வகையான பந்து வீச்சாளர்களால் பல்வேறு வழிகளில் ஆட்டமிழப்பது கவலையளிக்கிறது என்று இயன் பிஷப் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.இந்நிலையில் விராட் கோலிக்கு ஓய்வு(?!) அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, IPL 2022, Virat Kohli

    அடுத்த செய்தி