ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இது எல்லை மீறிய செயல்... ஹோட்டல் ரூம் வீடியோவை வெளியிட்ட ரசிகரை கடுமையாக சாடிய விராட் கோலி

இது எல்லை மீறிய செயல்... ஹோட்டல் ரூம் வீடியோவை வெளியிட்ட ரசிகரை கடுமையாக சாடிய விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

Virat Kohli Hote Room Viral Video | விராட் கோலி தன்னுடைய ஹோட்டல் ரூமை வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விராட் கோலி தங்கியிருக்கும்ட ஹோட்டலில் அவரது அறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கோலி இல்லாத போது அவரது அறைக்குள் சென்ற ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அதில் விராட் கோலி ரூமை எப்படி சுத்தமாக வைத்துள்ளார். அவர் வழிப்படும் சாமி சிலைகள் மற்றும் காலணிகள் போன்றவை உள்ளன.

  கோலி தனது ஹோட்டல் அறையில் இல்லாத போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கிரவுன் டவர்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தது. இந்த வீடியோ அதே ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோ கோலி கவனத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவால் கோபமடைந்த விராட் கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

  விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், , ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களை பார்க்க மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் எண்ணங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.ஆனால் என் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டு இருப்பதாகவே கருதுகிறேன்.
   
  View this post on Instagram

   

  A post shared by Virat Kohli (@virat.kohli)  ஹோட்டலில் தங்கும் போது என்னுடைய அறையில் கூட எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் பிறகு எனக்கு வேறு எங்கு கிடைக்கும். இதுபோன்ற செயலை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் விஷயமாகும். ரசிகர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் பொழுதுபோக்குக்கு ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டாம் என்றுள்ளார்.

  Also Read : ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் 2 முக்கிய வீரர்களை தூக்க சென்னை அணி திட்டம்?

  கிரவுன் பெர்த் ஹோட்டலில் இந்திய அணி தங்கியுள்ளது. இவ்வளவு பெரிய ஹோட்டலில், வீரர் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹோட்டல் அறைக்குள் நுழைந்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியம் மற்றும் பாதுகாப்பு மீறல் போன்றது. இதனால் ஹோட்டலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup, Virat Kohli