முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்டில் 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்த விராட் கோலி… ரசிகர்கள் உற்சாகம்

டெஸ்டில் 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்த விராட் கோலி… ரசிகர்கள் உற்சாகம்

விராட் கோலி

விராட் கோலி

நாட்கள் என்ற அடிப்படையில் 1,205 நாட்களுக்கு பின்னர் அவர் டெஸ்டில் சதம் அடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்டில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலி இன்று சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் கடைசியாக 2019 நவம்பர் மாதம் 22 ஆம்தேதி கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மேட்சில் சதம் அடித்திருந்தார். அதையடுத்து 40 மாதங்களுக்கு பின்னர் கோலி இன்று டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு இடைப்பட்ட நாட்களில் கோலி 41 இன்னிங்ஸ்களை டெஸ்டில் விளையாடியிருந்தார். இந்த போட்டிகளில் அவர் சதம் ஏதும் அடிக்காததால் அவர் மீது நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அவை அனைத்தையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் சதத்தை அடித்து ஊதித் தள்ளியுள்ளார் விராட் கோலி.

இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 28 ஆவது சதமாகும். நாட்கள் என்ற அடிப்படையில் 1,205 நாட்களுக்கு பின்னர் அவர் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். டெஸ்டில் சதம் அடிக்காததால் விமர்சனத்திற்கு ஆளாகி வந்த நிலையில், இன்றைய சிறப்பான ஆட்டம் விராட் கோலிக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இதையொட்டி சமூக வலைளதங்களில் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லனர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி, 4 ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரையில் 5 விக்கெட்டுகளை இழந்து 472 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் ஒருநாள் ஆட்டமே மீதம் இருப்பதால் இந்த போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

First published:

Tags: Cricket