தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் விராட் கோலி இன்று விளாசிய சிக்சர் கவனம் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான வீடியோ கோலி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் அடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட்கோலி 166 ரன்களும், சுப்மன் கில் 116 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியின்போது இலங்கை பவுலர் கசுன் ரஜிதா வீசிய 44 ஆவது ஓவரின் 4ஆவது பந்தை கோலி சிக்சராக பறக்கவிட்டார். ஸ்லோ பாலாக வந்த இதனை லாங் ஆன் திசைக்கு கோலி விரட்ட, பந்து 97 மீட்டர் தூரம சென்று விழுந்து சிக்சானது. இந்த ஷாட்டை தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் விளாசினார் கோலி. இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை கோலி ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். சிலர் இந்த ஷாட் ஏ.பி. டிவில்லியர்ஸ் ஸ்டைலில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
📹 Mighty Maximum - a 97m SIX from Virat Kohli 👀👀
Live - https://t.co/q4nA9Ff9Q2 #INDvSL @mastercardindia pic.twitter.com/R3CzXTWBT5
— BCCI (@BCCI) January 15, 2023
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. முதன்முறையாக இந்தியா இந்த சாதனையை இன்று ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2008-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது அந்த அணியை நியூசிலாந்து 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 402 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து பேட் செய்த அயர்லாந்து 112 ரன்களில் சுருண்டது.
ஒருநாள் போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி… 15 ஆண்டுகால ரிக்கார்டு முறியடிப்பு
இந்த 290 ரன்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச வெற்றி வித்தியாசமாக இருந்து வந்தது. இந்நிலையில், இதனை இந்திய அணி இன்று முறியடித்துள்ளது. இன்று இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகச்சிறப்பாக அமைந்ததால் இந்த வரலாற்று சாதனை யாரும் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது. இந்த சாதனையை எந்தவொரு சர்வதேச அணியும் அவ்வளவு எளிதில் முறிடித்து விட முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Virat Kohli