இது என்ன ஐ.பி.எல் போட்டியா?: வலைப்பயிற்சியில் பந்தை விளாசிய கோலி! (வீடியோ)

#ViratKohli hits Kuldeep Yadav for a big one At #Adelaide | வலைப்பயிற்சியில் வேகப்பந்து, சுழற்பந்து என எதையும் விட்டு வைக்காமல் அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கோலி பறக்கவிட்டார்.

news18
Updated: December 4, 2018, 8:29 PM IST
இது என்ன ஐ.பி.எல் போட்டியா?: வலைப்பயிற்சியில் பந்தை விளாசிய கோலி! (வீடியோ)
வலைப்பயிற்சியில் விராட் கோலி (BCCI)
news18
Updated: December 4, 2018, 8:29 PM IST
அடிலெய்டில் வலைப்பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி, ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியதுபோல் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (டிசம்பர் 6-ம் தேதி) தொடங்க உள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை வித்திக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இல்லை. இவர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் பலவீனமாக உள்ளது என்றும், அந்த அணியை கோலியின் படை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் கூறியுள்ளனர்.

கோலி மீதான அதீத நம்பிக்கை அவருக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் இன்று இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, வேகப்பந்து, சுழற்பந்து என எதையும் விட்டு வைக்காமல் அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் கோலி பறக்கவிட்டார். அந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
Loading...
கோலிக்கு வலைப்பயிற்சியின்போது உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பந்துவீசினர். கோலியின் வலைப்பயிற்சியைப் பார்க்கும்போது, இது என்ன ஐ.பி.எல் போட்டியோ என சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தது.

Also See...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்