ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலி சதம்… இந்தியா 373 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலி சதம்… இந்தியா 373 ரன்கள் குவிப்பு

விராட் கோலி

விராட் கோலி

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அளித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 373ரன்கள் குவித்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அளித்தனர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்தது. 67 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களை எடுத்தார். இதில் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் அடங்கும். சுப்மன் கில் 60 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.

அடுத்துவந்த ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோர் விராட் கோலியுடன் நிதானமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஷ்ரேயாஸ் 28 ரன்னிலும், ராகுல் 39 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்துவந்த பாண்ட்யா 14 ரன்னில் வெளியேறினார்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் விராட்கோலி சிறிதும் வேகம் குறையாமல் பேட்டிங் செய்து சதம் அடித்தார். 87 பந்துகளை எதிர்கொண்ட கோலி 1 சிக்சர் 12 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களை எடுத்துள்ளது.

கலர்ஸ் தமிழ் SA20 லீக் : அபினவ் முகுந்த் உடன் அறிமுக வர்ணனையாளராக கால்பதிக்கும் அனிருதா ஸ்ரீகாந்த்

இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தில்ஷன் மதுசங்கா, சமிகா கருணா ரத்னே, தசுன் ஷனகா, தனஞ்செய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்ததனர். இதையடுத்து 374 என்ற கடினமான இலக்கை நோக்கி இலங்கை பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: Cricket, India vs srilanka