சதம் அடித்த விராட் கோலி... அசத்தும் கோலி, ரஹானே ஜோடி

சதம் அடித்த விராட் கோலி... அசத்தும் கோலி, ரஹானே ஜோடி
  • News18
  • Last Updated: October 11, 2019, 11:29 AM IST
  • Share this:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார் விராட் கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் பங்கேற்றுள்ளது. 20 ஓவர் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

எனினும் நிதானமாக விளையாடிய மயங்க அகர்வால் 183 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்தடுத்தப் போட்டியில் ஷேவாக்குக்குப் பிறகு சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார் மயங்க் அகர்வால். அவருடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமாக விளையாடி அரை சதம் கடந்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 26-வது சதம் இதுவாகும்.இந்திய அணி 111 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை அடித்துள்ளது

Also watch

First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading