லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி.. எத்தனை கோடி தெரியுமா?

லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியிலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தில் உள்ளார்.

லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி.. எத்தனை கோடி தெரியுமா?
விராட் கோலி
  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் பேசுவது, சக கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடுவது தற்போது அதிகமாகி உள்ளது.

பிரபலங்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிட குறிப்பிட்ட தொகை வசூலிப்பது வழக்கம். அவ்வாறு லாக்டவுன் நேரத்தில் (மார்ச் 12-ம் தேதி முதல் மே-14 வரை) விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதித்து உள்ளார்கள் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் டாப் 10-ல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். கோலி 3 ஸ்பான்சர்கள் பதிவின் மூலமாக 3 கோடியே 60 லட்சம் சம்பாதித்துள்ளார். கோலியை இன்ஸ்டாகிராமில் சுமார் 6 கோடியே 21 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.


போர்சுகல் கால்பந்து அணயின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம் மூலம் 18 கோடி ரூபாய் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி(ரூ.12.5 கோடி) 2-வது இடத்திலும் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.11.5 கோடி)3வது இடத்திலும் உள்ளனர்.

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading