Home /News /sports /

அப்டீல்லாம் இல்லீங்க.. அவர் பார்முக்கு வந்துடுவாரு- மகேலா ஜெயவர்தனே

அப்டீல்லாம் இல்லீங்க.. அவர் பார்முக்கு வந்துடுவாரு- மகேலா ஜெயவர்தனே

மகேலா ஜெயவர்தனே

மகேலா ஜெயவர்தனே

ஒரு காலத்தில் கிங் கோலியாக இருந்தவர் இன்று ரன்கள் இல்லாமல் சதங்கள் இல்லாமல் ‘வெத்து’ கோலியாக மாறிவிட்டாரே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இலங்கை முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனேயிடம் கேட்க, அவரோ ‘அப்டீல்லாம் இல்லீங்க.. அவர் பார்முக்கு வந்துடுவாரு’ என்று கோலியின் இணைபிரியா ரசிகர்களுக்கு அவர் தெம்பு அளித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஒரு காலத்தில் கிங் கோலியாக இருந்தவர் இன்று ரன்கள் இல்லாமல் சதங்கள் இல்லாமல் ‘வெத்து’ கோலியாக மாறிவிட்டாரே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இலங்கை முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனேயிடம் கேட்க, அவரோ ‘அப்டீல்லாம் இல்லீங்க.. அவர் பார்முக்கு வந்துடுவாரு’ என்று கோலியின் இணைபிரியா ரசிகர்களுக்கு அவர் தெம்பு அளித்தார்.

    ஒன்றும் ஆடாமலேயே பார்ம் அவுட்டிலேயே ஓய்வும் பெற்று அணிக்கும் திரும்ப முடிகிறது என்றால் கோலியின் பழைய ஆட்டம் அதற்குக் காரணமல்ல, அவரைத் தாங்கிப் பிடிக்கும் வணிக சக்திகளே என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில் மகேலா ஜெயவர்தனே, அவர் ஆசியக்கோப்பை அணிக்குத் திரும்பியதைப் பற்றி கூறியதாவது:

    “இந்தத் தருணத்தில் விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் பார்ம் அவுட் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் ஒரு தரமான வீரர், இந்த பார்ம் வீழ்ச்சியிலிருந்து தன்னை மீட்டெடுத்து மீண்டும் பழைய பொலிவுக்குத் திரும்புவதற்கான அனைத்து சாதனங்களும் உத்திகளும் அவரிடத்தில் உள்ளன, எனவே வந்துடுவாரு, பார்ம் தற்காலிகமே, ஆனால் தரம் நிரந்தரம்” என்கிறார் மகேலா ஜெயவர்தனே.

    கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு வந்தது பற்றி...

    கே.எல்.ராகுல் அணிக்கு மீண்டும் வந்தாலும் அவர் கொஞ்ச நாட்களாக ஹை லெவல் கிரிக்கெட் ஆடாதது இந்திய அணிக்கு கவலை தரும் விஷயமாகும். எனவே அவர் இறக்கி கொஞ்சம் கேம் டைம் எடுத்துக் கொள்வார். அவர் தன்னம்பிக்கை பெற்று விட்டால் அது இந்திய அணிக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.

    ரிஷப் பண்ட் தொடக்கத்தில் இறங்கி ஆடுபவர் அல்ல, உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் அந்த நிலையில் ஆடியதில்லை, ஆனால் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் எந்த டவுனில் இறங்கினாலும் ஒரே மாதிரிதான் ஆடுவார்கள். ஆகவே ஓப்பனிங் என்பது அவருக்கு வித்தியாசமல்ல, அதிலும் சோபிப்பதற்கான அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளன. எனவே அவர் ஓப்பனிங் இறங்குவதும் ஒரு தெரிவுதான்.

    இவ்வாறு கூறினார் மகேலா ஜெயவர்தனே.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, Kl rahul, Rishabh pant, Virat Kohli

    அடுத்த செய்தி