Home /News /sports /

பாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி!

பாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி!

INDvsBAN

INDvsBAN

India vs Banglaesh | Indore Test | Virat Kohli fan invades stadium | மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் விராட் கோலியின் பெயரையும் அவரது ஜெர்சி நம்பரையும் தனது முதுகில் வரைந்திருந்தார்.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ரசிகர் ஒருவர் பாதுகபாப்பு தடைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார்.

இந்தூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது. இந்திய கேப்டன்களில் அதிக இன்னிங்ஸ் வெற்றி பெற்றவர்களில் கோலி(10 இன்னிங்ஸ் வெற்றி) தற்போது முதலிடத்தில் உள்ளார்.

கிரிக்கெட்டில் சாதனை நாயகனாக வலம் வரும் விராட் கோலிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பாதுகாப்பு தடைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை சந்திப்பது அதிகரித்து வருகிறது.

இந்தூர் டெஸ்ட் போட்டியிலும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து உள்ளார். விராட் கோலியின் பெயரையும் அவரது ஜெர்சி நம்பரையும் தனது முதுகில் அவர் வரைந்திருந்தார். மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் விராட் கோலியை கட்டிப்பிடித்துள்ளார்.





அந்த ரசிகரை வெளியேற்ற மைதான பாதுகாவலர்கள் விரைந்தனர். அப்போது அந்த ரசிகர்  தோள் மீது கையைப்போட்டு இவரை பொறுமையாக அழைத்து செல்லுங்கள் என்று  விராட் அறிவுறுத்தினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
Published by:Vijay R
First published:

Tags: India vs Bangladesh, Virat Kohli

அடுத்த செய்தி