பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இன்னொரு அரைசதத்தை தன் கணக்கில் சேர்த்தார். இந்த அரைசதம் மூலம் விராட் கோலி சிலபல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார், இதில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் 194 சர்வதேச அரைசதங்கள் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கோலி அடித்த அரைசதம் T20I கிரிக்கெட்டில் அவரது 32வது அரைசதமாகும், மேலும் அவர் T20I போட்டிகளில் அதிக 50+ ஸ்கோர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இப்போது ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிப் பெற்றுள்ளார். 27 அரைசதங்கள் மற்றும் நான்கு சதங்கள் அடித்துள்ள ரோஹித், T20I போட்டிகளில் மொத்தம் 31 அரைசதத்திற்கு மேல் எடுத்து உள்ளார்.
ராகுல் டிராவிட் அதிகபட்சமாக 509 போட்டிகளில் விளையாடி மொத்தம் 194 அரைசதங்களை அடித்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 சதங்கள் மற்றும் 56 அரைசதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 12 சதம் மற்றும் 83 அரைசதங்களையும் அடித்தார். விராட் தற்போது அவரது எண்ணிக்கையை சமன் செய்துள்ளார். 33 வயதான கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள், ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் மற்றும் 64 அரை சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 32 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேச ‘டான் பிராட்மேன்’ முஷ்பிகுர் ரஹீம் டி20-யிலிருந்து ஓய்வு
விராட் 466 போட்டிகளில் டிராவிட்டின் எண்ணிக்கையை சமன் செய்தார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50+ ஸ்கோரைப் பெற்ற பேட்டர்களின் பட்டியலில் இப்போது இணைந்த இரண்டாவது இந்தியராக கோலி உள்ளார். இந்தப் பட்டியலில் 664 போட்டிகளில் 264 அரைசதத்துக்கும் கூடுதலான ஸ்கோரை அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் முன்னிலை வகிக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup, Rahul Dravid, Virat Kohli