IND vs AUS T20 | ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் தோன்றிய விராட் கோலி - மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்

IND vs AUS T20 | ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் தோன்றிய விராட் கோலி -   மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்

கேப்டன் விராட் கோலி

இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை (virat kohli) போன்று வேடமிட்டு இருந்த நபர் அனைவரையும் வெகுவாக ஈர்த்தார்.

  • Share this:
    இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் ( IND vs AUS 3rd T20 ) கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக 2வது போட்டியில் ஆடாத கேப்டன் ஆரோன் பிஞ்ச் உடல் தகுதி பெற்று அணிக்கு திரும்பினார். ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் நீக்கப்பட்டார்.

    ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் மேத்யூ வேட் 2 பவுண்டரிகள் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினார். 2வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடிக்கையில் ஆரோன் பிஞ்ச் (0) ஹர்திக் பாண்டியாவிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் (23 பந்துகளில் 24 ரன்கள் - ஒரு பவுண்டரி) விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது அணியின் ஸ்கோர் 79 ரன்னாக (9.4 ஓவரில்) இருந்தது. அணியின் ஸ்கோர் 169 ரன்னாக உயர்ந்த போது மேத்யூ வேட் (80 ரன்கள், 53 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதே ஓவரில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய மேக்ஸ்வெல் ( 36 பந்துகாலில் 54 ரன்கள் - 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த ஓவரில் தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் (natrajan) ‘புல்டாஸ்’ பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார்.

    கடைசி ஓவரில் டார்சி ஷார்ட் (7 ரன்கள்) ரன்-அவுட் ஆனார். 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 5 ரன்களுடனும், டேனியல் சாம்ஸ் 4 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், நடராஜன், ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் அதுவும் இந்தியாவுக்கான போட்டி என்றால் இந்திய மக்கள் தவறாமல் அந்த போட்டிகளில் கலந்துகொள்வது வாடிக்கை.

    அந்த வகையில் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை (virat kohli) போன்று வேடமிட்டு இருந்த நபர் அனைவரையும் வெகுவாக ஈர்த்தார். எதர்ச்சையாக கேமராவை திருப்பிய கேமராமேனே ஒரு நிமிடம் அசந்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் இவர்களின் உருவ ஒற்றுமை பலரையும் குழப்பியது.

     

     



    கோலியின் தோற்றத்தை கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் வீடியோவை கண்ட பல ட்விட்டர் வாசிகள் மீம்ஸுகளுடன் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், ஒரு குறிப்பிட்ட துருக்கிய தொலைக்காட்சி தொடரான டிரிலிக்: எர்டுருலில் கோலியை போன்ற ஒருவரை கண்டு... விராட் பிரதர், இது நீங்களா? என்று கேட்டிருந்தார்.

     

     



     

    அந்த படத்தில் நடித்திருந்த நடிகர் கிட்டத்தட்ட விராட் கோலியை போல் இருந்ததற்கு அமீர், இவ்வாறு வேடிக்கையான கேள்வியை கேட்டிருந்தார். உலகில் ஒருவரை போல் ஏழு நபர்கள் இருப்பதாக பலர் கூற நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் கிட்டத்தட்ட உருவ ஒற்றுமையில் இருக்கின்ற நபர்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
    Published by:Sankaravadivoo G
    First published: