19 வயதேயான பவுலரிடம் அவுட்டான ‘கிங்’ கோலி!

#ViratKohli Dismissed By 19-Year-Old #AaronHardie | இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. #INDvAUSXI

19 வயதேயான பவுலரிடம் அவுட்டான ‘கிங்’ கோலி!
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் விராட் கோலி (Cricket Australia)
  • News18
  • Last Updated: November 29, 2018, 2:34 PM IST
  • Share this:
ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நம்பர் ஒன் டெஸ்ட் வீரரான கேப்டன் விராட் கோலி, 19 வயதேயான பவுலரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

டெஸ்ட் தொடருக்கு தயராகும் வகையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்கவீரர் கே.எல். ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா (66), புஜாரா (54), கோலி (64), ரகானே (56) மற்றும் விஹாரி (53) ஆகியோர் அரைசதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

போட்டியின் 48-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஹேர்டி வீசினார். 19 வயதேயான இவரின் 4-வது பந்தில் விராட் கோலி அடித்த பந்து, பந்துவீச்சாளர் ஹேர்டியின் கையில் தஞ்சம் அடைந்தது. இதனால், கோலி 64 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பன் ஒன் இடத்தில் இருக்கும் விராட் கோலி, 19 வயதேயான பவுலரிடம் விக்கெட்டை பறிகொடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also See...

First published: November 29, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்