கிரிக்கெட் வீரர் விராட் கோலி புத்தாண்டை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு 6 மில்லியன் லைக்ஸ்கள் குவிந்துள்ளன. விராட் கோலியைப் போன்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் புத்தாண்டை கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். விராட் கோலிக்கு கடந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக அமைந்தது. முந்தைய ஆண்டுகளில் அவர் சதம் அடிப்பதற்கு தடுமாறி வந்தார்.
1,020 நாட்களுக்கு பின்னர் ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்து பின்னடைவை முடிவுக்கு கொண்டு வந்தார். இதேபோன்று வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்தார். கடந்த ஆண்டில் மட்டும் 1,348 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார்.
இந்நிலையில் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார். இருவரும் இடம்பெறும் ஃபோட்டோவை விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 229 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
View this post on Instagram
இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் வித்திசாயசமான முறையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவும் கவனம் ஈர்த்து வருகிறது.
Knock knock... who’s there?
It’s 2023! 😃💫✨#HappyNewYear pic.twitter.com/aeE9p6nqRu
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2023
முன்னதாக தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, New Year 2023