• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் - விராத் கோலி அறிவிப்பு!

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் - விராத் கோலி அறிவிப்பு!

விராத் கோலி

விராத் கோலி

டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு  தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன். டி20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாக இதனை தொடர்வேன் என்று விராத் கோலி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராத் கோலி அறிவித்துள்ளார்.

    விராத்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக  அவர்  அணித் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் டி20 மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு  ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    எனினும் இந்த தகவலை பிசிசிஐ மறுத்தது.  அப்படி எதுவும் நடக்கவும் இல்லை, திட்டமும் இல்லை. பிசிசிஐ ஒருநாளும் கேப்டன்சியை பிரித்துக் கொடுப்பது பற்றி கூட்டமும் நடத்தவில்லை, இதைப்பற்றி பேசவும் இல்லை. விராட் கோலிதான் அனைத்து வடிவத்துக்கும் கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராத் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைப்பளு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளதாலும் கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட்களிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது,  டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு  தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன். டி20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாக இதனை தொடர்வேன்.

    இதையும் படிங்க: ஹிட் மேன் ரோகித் சர்மா தான் சிறந்த கேப்டன்: நீங்க என்ன சொல்றீங்க?


    தீவிர ஆலோசனைக்கு பின்னர், டி20 அணித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.  துபாயில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன்.  இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோரிடம் தெரிவித்துவிட்டேன்.  இந்திய கிரிக்கெடுக்கும் இந்திய அணிக்கும் தொடர்ந்து  பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: