Home /News /sports /

#ICCAwards: ஒரே ஆண்டில் 5 ஐசிசி விருதுகளை வென்று கோலி உலக சாதனை!

#ICCAwards: ஒரே ஆண்டில் 5 ஐசிசி விருதுகளை வென்று கோலி உலக சாதனை!

டெஸ்ட் கோப்பையை முத்தமிடும் விராட் கோலி. (Reuters)

டெஸ்ட் கோப்பையை முத்தமிடும் விராட் கோலி. (Reuters)

Hat-trick! #ViratKohli creates history #ICCAwards | சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணியையும் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வழங்கப்படும் 5 விருதுகளை ஒரே ஆண்டில் வென்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 2018-ம் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது. கோலி, கடந்த ஆண்டில் மட்டும் 13 டெஸ்டில் விளையாடி 5 சதங்களுடன் 1,322 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 55.08.

    14 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்களை விளாசி 1202 ரன்கள் எடுத்தார். இதில், அவரது பேட்டிங் சராசரி 133.55. அதேபோல், 10 டி-20 போட்டியில் களமிறங்கி 211 ரன்கள் எடுத்தார் ‘ரன்மெஷின்’ விராட் கோலி.

    அத்துடன், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

    Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


    இந்நிலையில், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்களுக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.

    அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், ஐசிசி டெஸ்ட் போட்டி வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் ஆகிய மூன்று விருதுகளை விராட் கோலி வென்றுள்ளார்.

    ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும், சிறந்த டெஸ்ட் கேப்டன், சிறந்த ஒரு நாள் போட்டி கேப்டன் ஆகிய 2 விருதுகளையும் கோலி வென்றுள்ளார்.

    விராட் கோலி, Virat Kohli, Allan Border
    டெஸ்ட் கோப்பை கையில் ஏந்திய அளவற்ற மகிழ்ச்சியில் கேப்டன் விராட் கோலி. (Image: AP)


    இதுகுறித்து கோலி கூறுகையில், “இந்த தருணம் மிகவும் அற்புதமானது. ஓராண்டு முழுவதும் செய்த கடின உழைப்புக்கு கிடைத்த சிறந்த பரிசு. நான் மட்டுமல்ல என்னுடைய அணியும் சிறப்பாக விளையாடியது. ஐசிசி வழங்கிய அங்கீகாரத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதுகள் எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளன” என்று தெரிவித்தார்.



    தொடர்ந்து 3 முறை சிறந்த ஒரு நாள் வீரர் விருதை வென்று கோலி அசத்தியுள்ளார். இதற்கு முன், 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை அவர் வென்றிருந்தார்.







    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணியையும் அறிவித்துள்ளது. டெஸ்ட் அணியில் விராட் கோலி கேப்டானாக உள்ளார்.

    ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு நாள் அணியில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகிய இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ரோகித் உடனான உறவு குறித்து இங்கிலாந்து நடிகை ஓபன் டாக்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: ICC Ranking, Indian cricket team, Jasprit bumrah, Rishabh pant, Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி