80-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போன்றது கோலியின் படை!

#DeanJones compares current Indian team with West Indies of 80s | ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது.

80-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போன்றது கோலியின் படை!
டீன் ஜோன்ஸ் மற்றும் விராட் கோலி.
  • News18
  • Last Updated: January 21, 2019, 1:25 PM IST
  • Share this:
1980-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்ததாக வலம் வருகிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி-20 தொடர் சமனில் முடிந்தது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது.


team india, இந்திய அணி
வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட கையோடு, நாடு திரும்பாமல், அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றது இந்திய கிரிக்கெட் அணி. அங்கு, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்களில் விளையாட உள்ளது.

இந்நிலையில், 1980-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியைப் போல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்ததாக வலம் வருகிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் புகழ்ந்துள்ளார்.

Loading...

Indian Team, இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி. (File)


“1980, 1990-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும், தற்போதுள்ள இந்திய அணிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தொடர்ந்து வெற்றிகளை குவித்து நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். எதிரணியை வெஸ்ட் இண்டீஸ் அணி அச்சுறுத்தும். அந்த தகுதி தற்போது இந்தியாவிடம் உள்ளது” என்று கூறியுள்ளார்.BCCI, Indian Team Celebration

வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)கடந்த 1980-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிளிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. அந்த அணியில் விவ் ரிச்சார்ட்ஸ், கிரீனிட்ஜ், மார்ஷல், ஜியோல் கார்னர், அம்புரோஸ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இருந்தனர். அந்த அணிக்கு ஒப்பீடாக தற்போதுள்ள இந்திய அணியை ஜோன்ஸ் ஒப்பிட்டுள்ளார்.

இந்திய வீரர்களே நியூசிலாந்தில் உஷார்... முன்னாள் வீரர் எச்சரிக்கை!

Also Watch...

First published: January 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...