HOME»NEWS»SPORTS»cricket virat kohli changed his twitter caption after the baby born tmn

பெண் குழந்தை பிறந்த பின் ட்விட்டர் கேப்ஷனை மாற்றிய விராட் கோலி - குவியும் பாராட்டுகள்

விராட் கோலி, அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் கேப்ஷனை விராட் மாற்றியுள்ளார்.

பெண் குழந்தை பிறந்த பின் ட்விட்டர் கேப்ஷனை மாற்றிய விராட் கோலி - குவியும் பாராட்டுகள்
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா
  • Share this:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி,பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.பிரபலங்களில் கியூட்டாக வலம் வரும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். அடிக்கடி இருவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் தான் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி ஆகஸ்ட் 27 ஆம் தேதி ட்விட்டரில் அறிவித்தார்.அதனை தொடர்ந்து அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதோடு தலைகீழாய் நின்றுக்கொண்டு யோகா செய்யும் புகைப்படம் மற்றும் vogue மேகசீனுக்கு அனுஷ்கா போஸ் கொடுத்திருந்த புகைப்படமும் சமூக வகைதளங்களில் வைரலானது.

இதையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது.இதை மகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களுடன் விராட் பகிர்ந்துக்கொண்டார்.





இந்நிலையில் தனது ட்விட்டர் கேப்ஷனை
‘ஒரு பெருமை மிக்க கணவன் மற்றும் தந்தை’என மாற்றியுள்ளார்’விராட் கோலி . விராட் கோலி, அனுஷ்கா தம்பதியரின் பெண் குழந்தையை ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published: