Virat Kohli | அவுட் ஆவதைப் பற்றி கவலைப்பட கூடாது, ரிஸ்க் எடுக்க வேண்டும்: பேட்ஸ்மென்களைக் காலி செய்யும் கோலியின் அறிவுரை

அவுட் ஆகிச் செல்லும் கோலி.

கடினமான சூழ்நிலைகளில் பேட்ஸ்மென்கள் அவுட் ஆவதைப் பற்றி கவலைப்பட கூடாது, ரிஸ்க் எடுத்து ரன்களை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டித் தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவின் 2 இன்னிங்ஸ் ஸ்கோர் 217 மற்றும் 170 ஆல் அவுட். இதனால் 8 விக்கெட்டுகளில் நியூசிலாந்திடம் இந்திய அணி மண்ணைக் கவ்வியது.

  இந்த இரண்டு இன்னிங்ஸ் சொதப்பல்களுக்குக் காரணமே ஸ்விங் பவுலிங்கை ஆடும் கால்நகர்த்தல்கல் டெக்னிக்குகள் இன்மையே, இதில் ரன் குவிப்பதற்காக தேர்வு செய்யும் ஷாட்களும் தேர்வு செய்யும் பந்துகளும் தவறானவை, இந்திய அணியின் உண்மையான பிரச்னைகளை பேசாமல் பாசிட்டிவ் என்ற ஒன்றை சூட்சமப் பொருளில் கோலி பேசி பலவீனங்களை மறைக்கப் பார்க்கிறார்.

  உண்மையில் நல்ல டெஸ்ட் வீரர் இங்கு இருக்கிறார்களா? புஜாராவை வைத்துக் கொண்டு ஒன்றும்செய்ய முடியாது, அவர் நிறைய ஓவர் பிட்ச், ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கூட ஆடமால் விடுகிறார், அல்லது நேராக பீல்டர் கையில் அடிக்கிறார். ஆகவே அணியில் இருப்பது விராட் கோலி, ரகானே மட்டும்தான், விராட் கோலி அடுத்தவர்களுக்கு அறிவுரை செய்கிறார், ஆனால் அவர் என்ன பாசிட்டிவ் ஆக ஆடுகிறார்? ஊருக்கு உபதேசமா? நியூசிஎனலாந்து அணி பாசிட்டிவாக ஆடவில்லை, கேன் வில்லியம்சனின் இன்னிங்ஸை நாயின் தூக்கத்துடன் ஒப்பிட்டு சேவாக் பதிவிட்டார், ஆனால் கடைசியில் அவர்கள்தான் உலக சாம்பியன். இப்படியிருக்கையில் உண்மையான தவறுகளை பிரச்னைகளைப் பேசாமல் அடித்து ஆடுங்கள் என்ற மோசமான அறிவுரையைக் கோலி வழங்குகிறார், இவர் இருப்பார் அணியில் நீண்ட காலம், இளம் வீரர்கள்? இவரே அடிக்கச் சொல்வார் பிறகு இவரே அணியை விட்டும் தூக்குவார்.

  சிறப்புக் கட்டுரை: 'தோற்றாலும் நாங்கள்தான் சாம்பியன்’ என்ற கோலி, ரவி சாஸ்திரியின் கர்வமான மனப்போக்கிற்கு நியூசிலாந்து கொடுத்த அடி

  இந்நிலையில் கோலியின் அறிவுரையைப் பார்ப்போம்:

  ரன்கள் அடிப்பதில்தான் கவனம் இருக்க வேண்டும், மனநிலையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். அவுட் ஆவதைப் பற்றி கவலைப்படக் கூடாது. தடுப்பாட்டத்தினால் பவுலர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து அவர்கள் ரிதமை நாம் ஊட்டி வளர்க்கக் கூடாது, அடித்து ஆடி அவர்கள் ரிதமை ஏதாவது செய்தால்தான் நல்லது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  300 ரன்களை நாம் எடுத்தோமானால் எதிரணிக்கு அது வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுக்கும். எனவே இங்கிருந்து நாம் முன்னேற வேண்டிய வழி ரன்களை விரைவில் எடுக்க வேண்டுமே தவிர அவுட் ஆகிவிடுவோமோ என்று கவலைப்படக் கூடாது. எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க இதுதான் ஒரே வழி. இல்லையெனில் வெறுமனே களத்தில் நின்று கொண்டு நாம் அவுட் ஆகவில்லை என்று திருப்தி அடைய வேண்டியதுதான். ஆனால் அவுட் ஆகி விடுவோம், ஏனெனில் நாம் தன்னம்பிக்கையுடன் ஆடாததினால்.

  ரிஸ்க் எடுத்து ஆடவேண்டும், ரிஸ்க் என்றால் சாமர்த்திய ரிஸ்குகளை எடுக்க வேண்டும். நியூசிலாந்து போன்ற தரமான பவுலிங்குக்கு எதிராக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆடினால்தான் நாம் ஏதாவது செய்ய முடியும்.

  இவ்வாறு கூறுகிறார் விராட் கோலி.

  ரிஸ்க் எடுத்து ஆட தொடக்க நன்றாக இருக்க வேண்டும், தொடக்க வீரர்கள் 90 -100 ரன்கள் வரை வந்தால் பின்னால் வருபவர்கள் ரிஸ்க் எடுக்கலாம், எப்படி சேவாக் தொடக்கத்தில் இறங்கிய பிறகு திராவிட் பாசிட்டிவ் ஆக ஆட ஆரம்பித்தாரோ, அப்படி. ஆனால் சேவாக் போன்ற வீரர்களெல்லாம் அரிதாக நிகழ்வது. மற்றபடி டெஸ்ட் போட்டிக்கென்றே டெவன் கான்வே, ரோரி பர்ன்ஸ் போன்ற உறுதியான வீரர்கள்தான் தேவை. அப்படி பாசிட்டிவாகா ஆட வேண்டுமென்றால் ஏன் கேப்டன் கோலி முன்னுதாரணமாக திகழக் கூடாது. இவருக்கு இவர் கரியர் எப்படி முக்கியமோ அதே போல்தானே மற்ற வீரர்களுக்கும்?
  Published by:Muthukumar
  First published: