உலகின் நம்பர் 1 டெஸ்ட் கிரிக்கெட் அணி என மகுடம் சூடப்போகும் அணி எது என தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் என டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 9 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வந்தன. கொரோனா பரவலுக்கு மத்திலும் தொடர்ந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியாவும், இரண்டாவது இடத்தை பிடித்த நியூசிலாந்தும் வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்படனில் மகுடத்துக்கான
இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.
Also Read:
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எதற்காக விண்வெளிக்கு செல்கிறார்?
இந்தியாவின் கேப்டன்
விராட் கோலிக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் என்பதோடு தனிப்பட்ட முறையில் அவர் சாதனை படைப்பதற்கான ஒரு வாய்ப்பும் இப்போட்டியின் மூலம் கிடைத்துள்ளது.
சதங்களாக குவித்து வந்த விராட் கோலி கடைசியாக டெஸ்ட் போட்டியில் கடந்த 2019ம் ஆண்டு தான் சதம் அடித்திருந்தார். அதுவும் கொல்கத்தாவின் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு ஆட்டத்தில் தான் அவர் கடைசியாக சதம் அடித்திருந்தார். அதன் பிறகு எந்தவொரு போட்டியிலும் அவர் சதம் அடிக்கவில்லை, ஆனால் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் அவர் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தகர்க்கக்கூடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கேப்டனாக அதிக சதங்கள் எடுத்தவர் என்ற சாதனை முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான
ரிக்கி பாண்டிங் வசம் உள்ளது. இதுவரை அவர் 41 சதங்கள் கேப்டனாக அடித்துள்ளார். கேப்டனாக கோலியும் 41 சதங்கள் எடுத்து சமநிலையில் உள்ள நிலையில் அவர் மேலும் ஒரு சதம் எடுத்தால் உலகிலேயே கேப்டனாக அதிக சதம் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறிவிடுவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.