ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை முறிடியத்த விராட் கோலி…

கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை முறிடியத்த விராட் கோலி…

சச்சின் - விராட் கோலி

சச்சின் - விராட் கோலி

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 46 சதம், டெஸ்ட் போட்டிகளில் 27 மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சதம் ஆகியவற்றை அடித்திருக்கிறார் விராட் கோலி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் 2 சாதனைகளை விராட் கோலி இன்று முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு இந்திய அணியின் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இவற்றில் 8 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். இன்று அடித்த சதத்தின் மூலம் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சினின் 2 சாதனைகளை தகர்த்துள்ளார் விராட் கோலி.

இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி , சச்சினின் சாதனையை சமன் செய்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் சதம் விளாசி சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். உள்ளூரில் நடந்த சர்வதேச போட்டிகளில் 20 சதங்கள் அடிப்பதற்கு சச்சின் 160 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார். இதனை 99 இன்னிங்ஸ்களிலேயே சமன் செய்த கோலி, தனது 101 ஆவது இன்னிங்ஸில் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒரே அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட , அதிகபட்ச சதம் என்ற அடிப்படையில், சச்சினின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 சதங்களே சாதனையாக இருந்தது. இதனை இன்று நடந்த இலங்கைக்கு எதிரான சதத்தின் மூலம் கோலி முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக கோலி இதுவரை 10 சதங்களை விளாசியுள்ளார்.

இதேபோன்று இலங்கை அணிக்கு எதிராக சச்சினின் 8 சதங்களையும் கோலி கடந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 சதங்களை பதிவு செய்துள்ளார் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் மகேலா ஜெயவர்த்தனே 12,650 ரன்கள் எடுத்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட 5ஆவது அதிகபட்ச ரன்னாகும். இதனையும் இன்று நடந்த போட்டியில் விராட் கோலி முறியடித்தார். 62 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜெயவர்த்தனேயின் ரிக்கார்டும் கோலியால் தகர்க்கப்பட்டது.

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 46 சதம், டெஸ்ட் போட்டிகளில் 27 மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சதம் ஆகியவற்றை அடித்திருக்கிறார் விராட் கோலி.

First published:

Tags: Cricket