Home /News /sports /

6 வருடங்களுக்கு பின் பந்துவீசிய கோலி... பவுலிங் ஸ்டைலில் பிரபல வீரரின் நினைவு - வைரல் வீடியோ

6 வருடங்களுக்கு பின் பந்துவீசிய கோலி... பவுலிங் ஸ்டைலில் பிரபல வீரரின் நினைவு - வைரல் வீடியோ

விராட் கோலி

விராட் கோலி

இந்த ஆட்டத்தில் 17வது ஓவரை வீசியதன் மூலம், சர்வதேச டி-20கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, IndiaUAEUAEUAE
ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி பந்துவீசியதன் மூலம், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட 6 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார். இவருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், இவர் எது செய்தாலும் செய்தியாவது வைரலாவதைப் பார்க்கும் போது ‘பட்சி’ சொல்கிறது அவர் டி20 வடிவத்திலிருந்தும் ஒருநாள் போட்டி வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுவார் என்று.

கோலி சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பவுலிங் செய்ததைப் பார்க்க ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இவரது ஆக்‌ஷன் ஒரு புரிந்துக் கொள்ள முடியாத ஆக்‌ஷனாகும். ஒரு ஓவர் வீசிய கோலி 6 ரன்களை விட்டுக் கொடுத்தார். இவரது பவுலிங்கில் விசேஷம் என்னவெனில் மெதுவாக ஓடி வந்து ஸீம் அப் பந்துகளை வீசுவது, நியூசிலாந்தில் முன்பு கிறிஸ் ஹாரிஸ் என்பவர் இதே போல் வீசுவார், கிட்டத்தட்ட விராட் கோலி அதே போல்தான் ஒரு லெக் கட்டர் ஆக்‌ஷனில் வீசுகிறார்.

இதையும் வாசிக்க: ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்த விராட் கோலி - ஹாங்காங் அணியின் ஜெர்சி பரிசு

கிறிஸ் ஹாரிஸ் அவர் காலத்தில் அடிப்பதற்கு கடினமான ஒரு பவுலர். அதே போல் விராட் கோலி பவுலிங்கை கொஞ்சம் டெவலப் செய்தால் நிச்சயம் ஒரு மிடில் ஓவர் பவுலராக பரிணமிக்கலாம், குறிப்பாக ஒருநாள், டி20களில் ஒரு பகுதி நேர ஸ்பின் பவுலராக அவரால் செயல் பட முடியும். சில வேளைகளில் டெஸ்ட் போட்டிகளிலும் கூட எதிரணியினரின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவிக்கும் போது இத்தகைய பவுலர்கள் நிச்சயம் கைக்கொடுப்பார்கள். கிறிஸ் ஹாரிஸ் அப்படிப்பட்ட பவுலர்தான், தென் ஆப்பிரிக்காவின் மறைந்த கேப்டன் ஹான்சி குரோனியே அத்தகைய ஒரு பவுலர்தான்.



இந்த ஆட்டத்தில் 17வது ஓவரை வீசியதன் மூலம், சர்வதேச டி-20கிரிக்கெட்டில், கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணிக்காக பந்துவீசியுள்ளார். அவர் கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் பந்துவீசினார். அந்த சந்தர்ப்பத்தில், ரவிச்சந்திரன் அஷ்வின் இன்னும் தனது ஓவர்களின் ஒதுக்கீட்டை முடிக்கவில்லை என்ற போதிலும், கடைசி ஓவரில் இந்தியா 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தபோதும், ​​எம்எஸ் தோனி கோலிக்கு பந்து வீச அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், சேவாக், மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ், நம் சவுரவ் கங்குலி போன்றோரும் பவுலிங் வீசி அணிக்குத் தேவையான தருணத்தில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளனர்.  இந்தியா நேற்று வென்று குரூப் ஏ- பிரிவில் டாப் நிலையில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Asia cup cricket, Indian cricket team, Virat Kohli

அடுத்த செய்தி