இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் 3-0 என்ற கணக்கில் இலங்கையை இந்தியா ஒயிட்வாஷ் செய்ததது. இதனிடையயே இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் இன்று தொடங்கியது.
பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டி என்பதால், போட்டி துவங்குவதற்கு முன்பாக அவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு நினைவு பரிசு வழங்கினார். இந்த சிறப்பான தருணத்தில் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பங்கேற்றார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், மாயன்க் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த போது லஹிரு குமாராவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான மாயன்க் அகர்வால் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
Also Read : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரவித்த கிரிக்கெட் வீரர் நடராஜன்
இன்றைய போட்டியில் விராட் கோலி 4-வது வீரராக களமிறங்கினார். ஹனும விஹாரியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விராட் கோலி சிறப்பாக விளையாடினார். விராட் கோலி தனது 100-வது போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இன்னிங்ஸ் படி டெஸ்ட்டில் 8000 ரன்களை கடந்த வீரர்கள்
1. 154 - சச்சின் டெண்டுல்கர்
2. 157 - ராகுல் டிராவிட்
3. 160 - வீரேந்திர சேவாக்
4. 166 - சுனில் கவாஸ்கர்
5. 169 - விராட் கோலி
6. 201 - வி.வி.எஸ்.லக்ஷ்மன்
இந்நிலையில் விராட் கோலி 45 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட் பறிகொடுத்தார். 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தி அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.