• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 23 ரன்னில் விராட் கோலி செய்த இமாலய சாதனை!

23 ரன்னில் விராட் கோலி செய்த இமாலய சாதனை!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (BCCI)

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (BCCI)

Virat Kohli beats Sachin Tendulkar World Record | சிட்னி டெஸ்டில் கோலி வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிர்கள் அதிருப்தி அடைந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிட்னி டெஸ்டில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்ததன் மூலம், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (ஜன.3) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    India Vs Australia, சிட்னி
    சிட்னியில் டாஸ் போடும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள். (BCCI)


    தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 9 ரன்னிலும், மயங்க் அகர்வால் 77 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 3-வது வீரராக களம் புகுந்த கேப்டன் விராட் கோலி, பெரிய அளவில் ரன் சேர்ப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    Virat Kohli, விராட் கோலி
    விராட் கோலி 23 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். (BCCI)


    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, வெறும் 23 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிர்கள் அதிருப்தி அடைந்தனர். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்து வரும் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை செய்துள்ளார். 23 ரன்களில் என்ன சாதனையை செய்ய முடியும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு விடையுள்ளது.

    Virat Kohli, விராட் கோலி
    சச்சின் டெண்டுகரின் சாதனையை முறியடித்த விராட் கோலி.


    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் 19ஆயிரம் ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை ‘ரன் மெஷின்’ விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 432 இன்னிங்சில் களமிறங்கி இந்த சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில், கோலி அவரை விட 33 இன்னிங்ஸ் குறைவாக களமிறங்கி 19 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். அதவாது, கோலி 399 இன்னிங்சிலேயே இந்த சாதனையை செய்துள்ளார்.

    Virat kohli
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி தனது  25-வது சதத்தை அடித்தார்.(BCCI)


    இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில், பிரையன் லாரா (433), ரிக்கி பாண்டிங் (444), ஜாக் காலீஸ் (458) ஆகியோர் உள்ளனர். 30 வயதான கோலி, 2018-ல் மொத்தம் 2,735 ரன்கள் எடுத்தார். இதில் 11 சதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் 13 டெஸ்டில் 5 சதங்களுடன் 1,322 ரன்கள் எடுத்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். அதேபோல், 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 1,202 ரன்களை விளாசியுள்ளார்.

    சிட்னி டெஸ்ட்: முதல் நாளிலேயே 300 ரன்களைக் கடந்த இந்தியா...


    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: