முகப்பு /செய்தி /விளையாட்டு / சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடித்த விராட் கோலி..

சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடித்த விராட் கோலி..

விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர்

விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன், ஐசிசி தொடர்களில் 23 முறை அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

  • Last Updated :
  • inter, IndiaAustraliaAustralia

பாகிஸ்தான் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி, கிரிகெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியின் மூலம் ஐசிசி தொடர்களில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையை  அவர் படைத்தார்.

சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன், ஐசிசி தொடர்களில் 23 முறை அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி நேற்றைய போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், 24 முறை அரை சதம் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Also Read : ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் பதிவிற்கு கெத்தாக ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை - இணையத்தில் வைரல்

சச்சின் டெண்டுல்கர் இதுவரை, ஐசிசி தொடர்களில், 16 அரைசதங்களும், 7 சதங்களும் அடித்துள்ளார். விராட் கோலி இதுவரை ஐசிசி தொடர்களில் 22 அரைசதமும், 2 சதங்களும் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்த விராட் கோலி, தற்போது, மேலும் ஒரு சாதனையும் முறியடித்துள்ளார்.

top videos

    டி20 உலக கோப்பையில் அடுத்து இந்தியா வரும் அக்டோபர் 27ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் சிட்னி மைதானத்தில் மோதுகிறது.

    First published:

    Tags: ICC, ICC world cup, India vs Pakistan, Sachin tendulkar, Virat, Virat Kohli