டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் போய் விட்டார் கோலி : கிண்டலடித்த இங்கிலாந்து ரசிகர் குழு பார்மி ஆர்மி

கோலி, ஜாஃபர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி தனது மைதான சேஷ்டைகளாலும், இந்திய ஊடகங்கள் அவர் மீது காட்டும் அபரிமிதமான புகழ்ச்சியாலும் உலக அளவில் மதிப்பை இழந்து வருவதற்கு உதாரணமாக இங்கிலாந்து ரசிகர்படையான பார்மி ஆர்மி கோலியை கடுமையாகக்கிண்டல் செய்துள்ளது.

 • Share this:
  உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென் விராட் கோலி தனது மைதான சேஷ்டைகளாலும், இந்திய ஊடகங்கள் அவர் மீது காட்டும் அபரிமிதமான புகழ்ச்சியாலும் உலக அளவில் மதிப்பை இழந்து வருவதற்கு உதாரணமாக இங்கிலாந்து ரசிகர்படையான பார்மி ஆர்மி கோலியை கடுமையாகக்கிண்டல் செய்துள்ளது.

  அதாவது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி ஆடமாட்டார் ஏனெனில் அவர் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் அங்கம் வகிக்கிறார் என்று கடுமையாக கிண்டல் செய்துள்ளனர் இங்கிலாந்து ரசிகர்கள் படையான பார்மி ஆர்மி.

  இந்த பார்மி ஆர்மி ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் எதிரணியின் குறிப்பிட்ட நட்சத்திர வீரர்களை இலக்கு வைத்து கிண்டலடிப்பது வழக்கமே. அது போலவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி இருக்க மாட்டார், அவர் டோக்கியோ சென்று விட்டார் என்று கிண்டலடித்தனர்.

  Also Read: நாம் முதலில் இந்தியர்கள்:  ‘சாதிப்பெருமை’ பேசியதாக ஜடேஜா மீது சாட்டையைச் சுழற்றும் நெட்டிசன்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  புகைப்படத்தில் கோலி வில்வித்தை வீரர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரேக்கிங் நியூஸ்: விராட் கோலி இந்திய அணியில் இல்லை, அவர் டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைக்குத் தயாராகி வருகிறார் என்று கேப்ஷன் போட்டு கிண்டலடித்துள்ளனர் பார்மி ஆர்மி தன் ட்விட்டர் பக்கத்தில்.

  ஆனால் இந்திய ரசிகர்கள் சும்மா விடுவார்களா? இவர்களும் பதிலுக்கு பென் ஸ்டோக்ஸ் தொடரில் இல்லை டோக்கியோ ஒலிம்பிக் பாக்சிங் போட்டியில் பங்கு பெற சென்று விட்டார் என்று ட்வீட் செய்து கிண்டலடித்துள்ளனர். ஏனெனில் நைட் கிளப்பில் பார்களில் பென் ஸ்டோக்ஸ் தகராறு செய்து சிக்கினாரல்லவா அதை மனதில் கொண்டு இந்திய ரசிகர்களும் கிண்டலடித்து வருகின்றனர்.

  இன்னொரு டிவிட்டர்வாசி ‘பிரேக்கிங் நியூஸ்: ஆண்டர்சன் ஓய்வு பெற்றார், ரிஷப் பந்த் ஆடினால் நான் ஆடமாட்டேன்’ என்று பதிவிட்டு  கிண்டலடித்துள்ளனர்.

  ஆனால் வாசிம் ஜாஃபர் பார்மி ஆர்மியை அடித்த கிண்டல்தான் டாப், Barmy Army or Bar mein Army? என்று பதிவிட்டு குடிகார பார்மி ஆர்மி என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: