Home /News /sports /

ரிக்கி பாண்டிங்கின் இமாலய சாதனையை விராட் கோலி தகர்ப்பாரா?

ரிக்கி பாண்டிங்கின் இமாலய சாதனையை விராட் கோலி தகர்ப்பாரா?

Virat kohli

Virat kohli

33 வயதாகும் கோலி அனைத்து வடிவ போட்டிகளிலும் இதுவரை 70 சதங்கள் அடித்துள்ளார். இதில் கேப்டனாக எடுக்கப்பட்ட 41 சதங்களும் அடங்கும்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் படைத்திருக்கும் இமாலய சாதனையை, நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தகர்க்க அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (டிசம்பர் 3) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.

இரண்டாவது டெஸ்டில் டி20 தொடரிலும், முதல் டெஸ்டிலும் பங்கேற்காத விராட் கோலிக்கு திரும்புகிறார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கோலி அணிக்கு திரும்புவது பெரும் பலமாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரகானே, புஜாரா ஆகியோர் ஃபார்மில் இல்லாமல் இருப்பதால் சற்று பலம் குறைந்து காணப்படுகிறது.

Also read:  ஓமைக்ரான் வைரஸால் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

நாளைய போட்டியில் கேப்டன் விராட் கோலி, இமாலய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 33 வயதாகும் கோலி அனைத்து வடிவ போட்டிகளிலும் இதுவரை 70 சதங்கள் அடித்துள்ளார். இதில் கேப்டனாக எடுக்கப்பட்ட 41 சதங்களும் அடங்கும். உலக அளவில் கேப்டனாக அதிக சதங்கள் எடுத்த வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவரும் 41 சதங்கள் கேப்டனாக எடுத்துள்ளார். இருவரும் தற்போது சமநிலையில் இருக்கின்றனர்.

இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி சதம் அடிக்கும்பட்சத்தில் உலக அளவில் கேப்டனாக அதிக சதம் எடுத்தவர் என்ற இமாலய சாதனை விராட் கோலியின் வசமாகும். ஆனால் அது சாத்தியமாகுமா என்பது ஒரு சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட எடுக்காமல் இருக்கிறார். அவர் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு ஆட்டத்தில் சதம் கண்டிருந்தார்.

அதே நேரத்தில் இந்த போட்டி மும்பையில் நடைபெறுவது கோலிக்கு சாதகமான ஒன்றாகும். மும்பை வான்கடே மைதானத்தில் கோலியின் சராசரி 72.16 ஆக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் கோலியின் 3வது சிறந்த சராசரி மும்பை வான்கடே மைதானம் என்பது கவனிக்கத்தக்கது. அவர் மும்பையில் ஆடிய 4 டெஸ்ட் போட்டிகளில் 433 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக 2016ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்துடனான போட்டியில் கோலி 235 ரன்கள் குவித்துள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கரிடம் கோலி பேட்டிங் பயிற்சி எடுத்து இந்த போட்டிக்காக தயாராகி இருக்கிறார். இந்த ஆட்டத்தில் கோலி சதம் எடுத்து சாதிப்பாரா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Captain Virat Kohli, India vs New Zealand, Virat Kohli

அடுத்த செய்தி