ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் கோலி -அனுஷ்கா ஜோடி!

பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் கோலி -அனுஷ்கா ஜோடி!

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனாவால் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உறுதிப்படுத்தி உள்ளனர்.

  இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலார்கள் உட்பட பலர் தங்களது வாழ்வாதரத்தை இழந்து உள்ளனர்.

  கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தங்களால் முயன்ற உதவியை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். அதைதொடர்ந்து பிரதமர் பொது நிவாரண நிதிக்கு பலர் தங்களால் முயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நிவாரண நிதிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுஷ்கா மற்றும் நான் பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா நிவாரண நிதிக்கு ஆதரவளிக்கிறோம். பலரின் துன்பங்களை பார்த்து எங்கள் இதயம் நொறுங்கி விட்டது. நிவாரண நிதியில் எங்களின் பங்களிப்பு சக குடிமக்களுக்கு வலியை குறைக்கும் என நம்புகிறோம்“ என்றுள்ளார்.

  விராட் கோலி நிவாரண நிதியாக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்ற விவரத்தை வெளிப்படுத்தவில்லை. கிரிக்கெட் வீரரர்கள், சினிமா பிரபலங்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்படுவதால் அவர் எவ்வளவு தொகை என்று குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published:

  Tags: CoronaVirus, Virat Kohli