Home /News /sports /

கிரிக்கெட்டை விளையாடாமல் எங்கள் உணர்ச்சிகளுடன் கோலி விளையாடினார், அதனால் வெற்றி பெற்றோம்- டீன் எல்கர்

கிரிக்கெட்டை விளையாடாமல் எங்கள் உணர்ச்சிகளுடன் கோலி விளையாடினார், அதனால் வெற்றி பெற்றோம்- டீன் எல்கர்

கோலியின் கோணங்கித்தனத்தை சாடும் எல்கர்

கோலியின் கோணங்கித்தனத்தை சாடும் எல்கர்

தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், டிஆர்எஸ் சர்ச்சை குறித்து கூறிய போது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்டின் போது களத்தில் எதிரணியினரை வசைப்பாடுவதினால் திசைதிருப்பப்பட்டு கவனத்தை இழந்தார். இதனால் நாங்கள் இலக்கை நோக்கி செல்ல ஒரு ‘சாளரம்’ கிடைத்தது என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், டிஆர்எஸ் சர்ச்சை குறித்து கூறிய போது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்டின் போது களத்தில் எதிரணியினரை வசைப்பாடுவதினால் திசைதிருப்பப்பட்டு கவனத்தை இழந்தார். இதனால் நாங்கள் இலக்கை நோக்கி செல்ல ஒரு ‘சாளரம்’ கிடைத்தது என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் கூறினார்.

  கோலியின் கோணங்கித்தனம் நாளுக்கு நாள் களத்தில் அதிகரிக்கிறது, ராகுல் திராவி பெவிலியனில் முகத்தைச் சுளிக்கிறார். ஆனாலும் இவரது லும்பனிசம் குறையவில்லை. அஸ்வின் ஒரு லும்பன் கிரிக்கெட்டர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

  ஹாக் ஐ என்பது அணிக்கு சம்பந்தமற்ற ஒரு தனித்த அமைப்பு, அது தொழில்நுட்பம். இதே மயங்க் அகர்வால் தப்பிய போது கோலிக்கு இனித்தது, ஆனால் எல்கர் தப்பியதும் ஏதோ பிராடு நடப்பது போல் மைக் முன்னால் சென்று, “பந்தை தேய்த்துப் பளபளப்பேற்றும் போது உங்கள் அணியினர் மீது கவனம் செலுத்து, எதிரணியினரை அல்ல. எப்போதும் யாரையாவது எதிலாவது மாட்டி விடுவது” என்று விராட் கோலி கூற, தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்த அஸ்வின், “வெற்றி பெற இதை விட சிறந்த வழிகள் உள்ளன” என்று அசிங்கமாக பேசினார்.

  தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி வரலாறு எதுவும் தெரியாமல், இப்போதுள்ள அணி எப்பேர்ப்பட்ட கடினப்பாடிலிருந்து மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத கே.எல்.ராகுல், “ஒரு நாடே 11 வீரர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது” என்று முத்து உதிர்த்துள்ளார்.

  கடைசியில் தென் ஆப்பிரிக்கா மிக அருமையாக வெற்றியைப் பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது, இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், “இது வெளிப்படையாக எங்களுக்கு ஒரு சாதகத்தை வழங்கியது. குறிப்பாக நேற்று (வியாழன்) நாங்கள் கொஞ்சம் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும், எங்களுக்குத் தேவையான இலக்கை எட்ட கோலியின் நடத்தை உதவியது.

  கோலியின் இந்த நடத்தை எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. காரணம் ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்தியர்கள் உண்மையில் விளையாட்டைப் பற்றி மறந்துவிட்டார்கள், கிரிக்கெட்டை ஆடுவதை விடுத்து எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடினார்கள்.

  இந்த சர்ச்சை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் இறுதியில் நாங்கள் வெற்றி பெற அது உதவியதுதானே! இந்திய அணிக்கு எதுவும் சரியாகப்போகவில்லை. சமீப காலமாக இந்தியா இத்தகைய அனுபவத்திற்கு பழக்கமாகவில்லை. எனவே அழுத்தம் எகிறியதில் வார்த்தைப் போரில் இறங்கினார்களே தவிர ஆட்டத்தில் கவனம் செலுத்தவில்லை.

  ஆனால் நாங்கள் இலக்கை நோக்கி சரியாக ஆட வேண்டியிருந்தது. பவுலர்களுக்கு கொஞ்சம் கூடுதல் உதவி பிட்சில் இருப்பது தெரிந்து நாங்கள் கூடுதல் கட்டுக்கோப்புடன் ஆட வேண்டியிருந்தது.

  உள்ளூர் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைவது ஒருபோதும் சிறந்ததல்ல.மெதுவாகத் தொடங்குவது தென்னாப்பிரிக்காவின் குணாதிசயம் என்று நான் நினைக்கிறேன், உண்மையில் எழுவதற்கு நாங்கள் கிட்டத்தட்ட 0-1 கீழே இருக்கிறோம் என்ற நிர்பந்தம் காரணமாக இருக்கலாம்.

  இரண்டாவது டெஸ்டிற்கு முன்பு அணி வீரர்களிடம் பேசினேன். . வீரர்கள் தாங்களே பொறுப்பை ஏற்று, தங்கள் விக்கெட்டை தூக்கி எறியாமல் மதிப்பு கொடுத்தனர். ஒரு சில அவுட்கள் தேவையற்றதாக இருந்ததோடு கவனமின்மையும் வெளிப்பட்டன. இதுதான் முதல் டெஸ்ட்டில் தோற்றோம் என்று பேசினேன்.

  இறுதியில் வீரரிடமிருந்து சிறந்ததை வெளியே கொண்டு வருவது முக்கியம் அதைச் செய்ததில் , நான் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன், அவர்களும் இதைப் புரிந்து கொண்டு எழுந்து நின்று பங்களிப்பு செய்தனர்” என்றார் டீன் எல்கர்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, India vs South Africa

  அடுத்த செய்தி