நியூசிலாந்து-இந்தியா மோதும் போட்டி... 11 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு

2008-ம்ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

news18
Updated: July 7, 2019, 5:19 PM IST
நியூசிலாந்து-இந்தியா மோதும் போட்டி... 11 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு
விராட் கோலி
news18
Updated: July 7, 2019, 5:19 PM IST
உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோலி தலைமையில் இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோதுகிறது.

2019 உலகக்கோப்பை தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் முதல் அரையிறுதிப் போட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளது. அதைத்தொடர்ந்து வியாழக்கிழமை இரண்டாவது அரையிறுதிபோட்டி ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் வெல்லும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போடியில் மோதுகின்றன.


முதல் அரையிறுதி போட்டியில் மோதும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த போட்டியை நினைவுபடுத்துகிறது. ஆம் 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில் இதே இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சனும் இருந்தனர்.

விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்


தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதே கேப்டன்கள் தலைமையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2008-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நடைபெறவிருக்கும் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி வெற்றி பெற்று சாதிக்குமா என்பதை வரும் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

Loading...

2008 -ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் விராட் கோலியும் ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...