களத்தில் எதிரி; வெளியில் நண்பன்...! விராட்கோலியை வஞ்சப் புகழ்ந்த அக்தர்

விராட் கோலி - அக்தர் இருவரும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளனர்.

களத்தில் எதிரி; வெளியில் நண்பன்...! விராட்கோலியை வஞ்சப் புகழ்ந்த அக்தர்
விராட் கோலி - அக்தர் இருவரும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளனர்.
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். போட்டிகள் இல்லாததால் ரசிகர்களை குஷிபடுத்த வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரும், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவருமான சோயப் அக்தர் ஈ.எஸ்.பி.என் கிரிக்கெட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த போட்டியில் விராட் கோலி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

விராட் கோலியும், நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இருவரும் பஞ்சாபி என அக்தர் கூறியுள்ளார்.  எனவே நாங்கள் களத்திற்கு வெளியில் சந்தித்தால் சிறந்த நண்பர்களாக இருப்போம் என சிநேகிதமாக தெரிவித்துள்ளார்.


அதே வேளையில் இருவரும் போட்டியில் சந்தித்தால் அவருக்கு மிகச்சிறந்த எதிரியாக இருந்திருப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். மேலும், விராட் கோலியுடன் கடுமையாக சண்டையிட்டு இருப்பேன். அவருடைய கவனத்தை திசை திருப்பி, என்னுடைய முழு வேகத்தில் தலைக்கு மேல் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்தி இருப்பேன் என வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளார்.

விராட் கோலி - அக்தர் இருவரும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இருப்பினும் அக்தர் விராட் கோலிக்கு பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading