Home /News /sports /

இந்திய வீரர்களே நியூசிலாந்தில் உஷார்... முன்னாள் வீரர் எச்சரிக்கை!

இந்திய வீரர்களே நியூசிலாந்தில் உஷார்... முன்னாள் வீரர் எச்சரிக்கை!

கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி.

கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி.

New Zealand can't be taken lightly: Former cricketer | இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. #NZvIND

  • News18
  • Last Updated :
    நியூசிலாந்து அணியை எளிதாக எண்ணிவிட முடியாது என கேப்டன் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான டி-20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது.

    Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


    பின்னர் நடந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட கையோடு, நாடு திரும்பாமல் அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றது இந்திய கிரிக்கெட் அணி.

    team india, இந்திய அணி
    வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)


    ஆக்லாந்து விமான நிலையம் வந்த இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.



    இந்நிலையில், நியூசிலாந்தை எளிதாக எண்ண முடியாது என கேப்டன் கோலிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    “நியூசிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அதனால், இந்திய அணிக்கு மிகவும் சவால் அளிப்பார்கள். உலகக் கோப்பைக்கு முன்னால் இந்தியா ஒரு கடுமையான அணியை எதிர்கொள்வது நல்லது” என்று கூறினார்.

    மேலும், “நியூசிலாந்தில் தரமான பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் உள்ளனர். அவர்களை எளிதில் எண்ண முடியாது” என்று மதன் லால் குறிப்பிட்டுள்ளார்.

    Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
    விராட் கோலி மற்றும் அணி வீரர்கள். (AP Photo/Matt Dunham)


    ஆஸ்திரேலியாவில் அனுபவம் குறைந்த வீரர்களை எதிர்கொண்ட இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி கடும் சவால் அளிக்கும். அந்நாட்டு மைதானங்களைப் பொறுத்தவரை, சிறியதாக இருப்பதால் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டு எதிரணியை திணற வைக்க அதிக வாய்ப்புள்ளது

    நியூசிலாந்து சென்றது இந்திய கிரிக்கெட் அணி!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Indian cricket team, Virat Kohli

    அடுத்த செய்தி