என்ன அருமையான சாப்பாடு! - கோலி, அனுஷ்கா சர்மா அசந்து போன ரெஸ்டாரன்ட்

விராட் கோலி, அனுஷ்கா சர்மா டெண்ட்ரில் கிச்சன் ஹோட்டலில்.

லண்டனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் மிகப்பெரிய விசிறிகள் ஆவார்கள்.

 • Share this:
  லண்டனில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் மிகப்பெரிய விசிறிகள் ஆவார்கள்.

  சமீபத்தில் இருவரும் மற்றும் சில இந்திய வீரர்களும் இந்த ஹோட்டலுக்குச் சென்று அருமையான சாப்பாட்டை ருசித்துள்ளனர். ஆம் அந்த உணவு விடுதியின் பெயர் டென்ட்ரில் கிச்சன்.

  அதன் தலைமை செஃப் சச்தேவா இன்ஸ்டாகிராமில் விராட் கோலி அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய வீரர்கள் சிலர் வந்து உணவு அருந்தியதை பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

  அனுஷ்கா சர்மாதான் டென்ட்ரில் கிச்சனை ஆன்லைனில் கண்டுப்பிடித்தார். அனுஷ்கா சர்மாவுக்கு டெண்ட்ரில் கிச்சனின் போட்டோக்களும் அது பற்றி வந்த மதிப்பீடுகளும் பிடித்துப்போக கோலியிடம் சொல்ல, அவர் இந்த சச்தேவாவின் எண்ணுக்கு தொலைபேசி செய்து டேபிள் ஒன்றை ரிசர்வ் செய்துள்ளார்.
  புக் செய்தது யார் என்று சச்தேவுக்கு தெரியாது, கடைசியில் விராட் கோலி, அனுஷ்கா சர்மாதான் அது என்று அவர்கள் ஹோட்டலுக்குள் நுழைந்தவுடன் நெகிழ்ந்து போயுள்ளார் அவர். கோலியும் அனுஷ்கா சர்மாவும் மிகவும் எளிமையானவர்கள், புத்திசாலிகள் என்கிறார் மாஸ்டர் செஃப் சச்தேவ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருவருமே இந்த உணவு மிகப்பெரியது, பிரமாதம் சிறந்த உணவு என்று பாராட்டித் தள்ளி விட்டனர், என்கிறார் சச்தேவ். ஆனால் இதோடு முடியவில்லை மறுமுறை தங்களுடன் விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் இந்த முறை ராகுல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மயங்க் அகர்வால் ஆகியோருடன் வந்தனர். இந்த நாளையே மெகா ஹியூஜ் ஆக்கி விட்டனர் என்றார் சச்தேவ்.

  இன்ஸ்டாவில் இதைப் பதிவும் செய்துள்ளார் அவர்.
  Published by:Muthukumar
  First published: