தோனி மரண பயத்தைக் காட்டினார்... கோலி பரபரப்பு பேட்டி!

#ViratKohli admits #MSDhoni gave #RCB massive scare with his whirlwind knock | தோனி 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். #RCBvCSK

தோனி மரண பயத்தைக் காட்டினார்... கோலி பரபரப்பு பேட்டி!
எம்.எஸ்.தோனி - விராட் கோலி.
  • News18
  • Last Updated: April 22, 2019, 1:24 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ருத்ரதாண்டவம் எங்களுக்கு மிகப்பெரிய பயத்தை காட்டியதாக பெங்களூரு அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி-20 தொடரில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில், முன்னணி வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற கேப்டன் தல தோனி தனியாளாக போராடினார். எதிரணி பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். அவர் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார்.
இருப்பினும், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் மட்டும் தோனி மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார்.

போட்டி முடிந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேசுகையில், “இந்தப் போட்டியில் நிறைய உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருந்தன. 19-வது ஓவர் வரை நாங்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தோம். கடைசி பந்தில் இதுநடக்கும் என எதிர்பார்த்தேன். த்ரில் வெற்றி பெற்றதை நன்றாக உணர்கிறேன். தோனி அவரது சிறந்த பங்களிப்பை கொடுத்தார். அத்துடன் பெரிய பயத்தையும் கொடுத்தார்” என கூறினார்.VIDEO | சி.எஸ்.கே-வின் வெற்றியைப் பறித்த ரன் அவுட்!

இதுலயும் தோனி தான் நம்பர் 1!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading