விளையாட்டு

  • associate partner
Home » News » Sports » CRICKET VIRAT KOHLI ABOUT RCB SAN SADA

விட்டு விலகுவதும் இல்லை; கைவிடுவதும் இல்லை... கேரியர் முடியும் வரை RCB அணிக்கே எனது ஆட்டம் - கோலி உருக்கம்

ஆர்.சி.பி ரசிகர்கள் தரும் பேராதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கோலி தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.

விட்டு விலகுவதும் இல்லை; கைவிடுவதும் இல்லை... கேரியர் முடியும் வரை RCB அணிக்கே எனது ஆட்டம் - கோலி உருக்கம்
டிவில்லியர்ஸ் உடன் கோலி
  • News18
  • Last Updated: April 25, 2020, 10:16 PM IST
  • Share this:
ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கிய (2008) காலத்திலிருந்து விராட் கோலி பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக தன்னுடைய கேப்டன்ஷிப் மூலம் பல்வேறு  கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் ஐ.பி.எல் கோப்பை மட்டும் விராட் கோலிக்கு எட்டாக்கணியாகவே உள்ளது. 12 தொடர்களில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை வந்தும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில், கொரோனோ அச்சுறுத்தலால் 13 வது ஐ.பி.எல் போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் உரையாடி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அப்போது தனது "ஆர்.சி.பி டீம் மேட்டும் தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி நாயகன் மிஸ்டர் 360" டி வில்லியர்ஸ் உடன்  இன்ஸ்டாமிராமில் விராட் கோலி உரையாடினார்.

ஆர்.சி.பி. அணியில் இருந்து விலகுவதை நான் நினைத்து கூட பார்த்ததில்லை. அணியிலிருந்து ஒரு போதும் விலக மாட்டேன். எனது கிரிக்கெட் கேரியர் முடியும் வரை பெங்களூரு அணிக்காகத்தான் விளையாடுவேன் என உருக்கமாக தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் தரும் பேராதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பகிர்ந்து கொண்டார்.


இதற்கு டி வில்லியர்ஸ், ஆர்.சி.பி அணியில் இருக்கும் வரை தொடர்ந்து அதிக ரன்களை குவிக்க முயற்சிப்பேன். ஆர்.சி.பி அணியிலிருந்து விலகும் முடிவு தமக்கும் இல்லை என தெரிவித்தார். விராட் கோலி - டிவில்லியர்ஸ் ஆறு வருடம் இணைந்து ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வருகின்றனர்.

2017, 19 ம் ஆண்டுகளில் கடைசி இடம் பிடித்து மோசமான தோல்வி கண்டது ஆர்.சி.பி. இதனால் கடந்த ஆண்டு தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டியன் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading