சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு தேவை 8 ரன்கள்!

#ViratKohli 8 runs away from major milestone | இன்னும் 13 ரன்கள் அடித்தால், வெளிநாட்டு மண்ணில் கேப்டனாக டெஸ்ட் போட்டியில் 2000 ரன்களைக் கடந்து, கோலி மேலும் ஒரு சாதனைப் படைப்பார். #AUSvIND

news18
Updated: December 4, 2018, 6:08 PM IST
சச்சின் சாதனையை முறியடிக்க கோலிக்கு தேவை 8 ரன்கள்!
இந்திய கேப்டன் விராட் கோலி (BCCI)
news18
Updated: December 4, 2018, 6:08 PM IST
ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களைக் கடந்த சச்சின், லக்‌ஷ்மன், டிராவிட் ஆகியோரின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 8 ரன்களே தேவைப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (டிசம்பர் 6-ம் தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலிய மைதானங்கள் அனைத்துமே பிடித்தமானவை தான்.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தடுமாறினாலும், தனிப்பட்ட முறையில் விராட் கோலிக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. அதேபோல் இந்த முறை அணியை வழிநடத்தும் இடத்தில் கோலி இருக்கிறார். 30 வயதான அவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பல சாதனைகளைச் செய்யவும் காத்திருக்கிறார்.

விராட் கோலி, Viral Kohli
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் விராட் கோலி (BCCI)


விராட் கோலி, இன்னும் 8 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்தியர் என்ற சாதனையைப் படைப்பார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்‌ஷ்மன், ராகுல் டிராவிட் ஆகியோர் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் 3 இந்திய வீரர்கள் வரிசையில் உள்ளனர்.

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் விராட் கோலி 2-வது இடத்தை பிடித்தார். 8 இன்னிங்சில் விளையாடி 692 ரன்கள் குவித்தார். இதில், 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் 992 ரன்கள் எடுத்துள்ள கோலிக்கு, இன்னும் 8 ரன்கள்தான் தேவைப்படுகிறது.

இன்னும் 13 ரன்கள் அடித்தால், வெளிநாட்டு மண்ணில் கேப்டனாக டெஸ்ட் போட்டியில் 2000 ரன்களைக் கடந்து கோலி மேலும் ஒரு சாதனைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
Also Watch...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்