Home /News /sports /

INDvWI | 25 ரன்கள்... டி20 வரலாற்றில் முதல் இந்திய வீரர்...! சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி

INDvWI | 25 ரன்கள்... டி20 வரலாற்றில் முதல் இந்திய வீரர்...! சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

India vs WestInides | Virat Kohli | விராட் கோலி 25 ரன்கள் அடித்தால் சொந்த மண்ணில் சர்வதேச டி20 போட்டிகள் 1000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார்.

    மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 25 ரன்கள் அடித்தால் விராட் கோலி வரலாற்று சாதனை படைப்பார்.

    இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 2வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 25 ரன்கள் அடித்தால் சொந்த மண்ணில் சர்வதேச டி20 போட்டிகள் 1000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார்.

    இதுவரை, விராட் கோலி சொந்த மண்ணில் 975 ரன்கள் அடித்துள்ளார். இன்றையப் போட்டியில் 25 ரன்கள் அடித்தால் இந்த சாதனையை அவர் எட்டுவார். சொந்த மண்ணில் டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்களில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் 1430 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளா்.

    மேற்கந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs west indies, Virat Kohli

    அடுத்த செய்தி