ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க 2 புள்ளிகள் பின்னடைவில் கோலி!

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க 2 புள்ளிகள் பின்னடைவில் கோலி!
ஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலி
  • Share this:
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க கோலி 2 புள்ளிகள் பின்னடைவில் உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 936 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதம் அசத்தினார். இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்சிஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.


இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பார். 1 புள்ளிகள் மட்டும் பெற்றால் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் முதலிடத்தில் நீடிப்பார்கள். இந்த போட்டியில் கோலி 1 புள்ளிக்கு மேல் பெற்றால் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடிப்பார்.

இந்திய அணியன் மற்ற பேட்ஸ்மேன்களில் புஜாரா 817 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், ரஹானே 9வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். பும்ரா 818 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 7வது இடத்திலும் உள்ளனர்.

Also Watch

Loading...

First published: October 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...