• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஈடன் கார்டன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

ஈடன் கார்டன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

விராட் கோலி

விராட் கோலி

India vs Bangladesh | Day-Nigth Test | Virat Kohli | கோலி 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5000 ரன்களை எட்டினார்.

  • Share this:
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைாதனத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா களமிறங்கினர். இந்திய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்த போது கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

    இந்த போட்டியில் கோலி 32 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5000 ரன்களை எட்டினார். விராட் கோலி கேப்டனாக 53வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

    மேலும் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5000 ரன்கள் எடுத்த வீரர் சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 97 இன்னிங்சில் 5000 ரன்கள் கடந்தார். இந்த சாதனையை விராட் கோலி 86வது இன்னிங்சில் முறியடித்துள்ளார்.



    டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்

    8659 ரன்கள் - கிரேம் ஸ்மித், தென்னாப்பிரிக்கா 193 இன்னிங்ஸ் (109 டெஸ்ட்)
    6623 ரன்கள் - ஆலன் பார்டர், ஆஸ்திரேலியா 154 இன்னிங்ஸ் (93 டெஸ்ட்)
    6542 ரன்கள் - ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா 140 இன்னிங்ஸ் (77 டெஸ்ட்)
    5233 ரன்கள் - லயாட், மேற்கிந்திய தீவுகள் 111 இன்னிங்ஸ் (74 டெஸ்ட்)
    5156 ரன்கள் - ஸ்டிபன் ப்ளமிங், நியூசிலாந்து 135 இன்னிங்ஸ் (80 டெஸ்ட்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: