ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 கிரிக்கெட் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்து அசத்தல்

டி20 கிரிக்கெட் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்து அசத்தல்

விராட் கோலி

விராட் கோலி

T20 World Cup | கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி டி20 போட்டியில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி டி20 போட்டியில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஓபனிங்கில் இந்திய வீரர்கள் சொதப்பினாலும் விராட் கோலி - ஹர்டிக்க பாண்டியாவின் பார்ட்னர்ஷிப்பால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக பாண்ட்யா 63 ரன்களும் விராட் கோலி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதையும் படிங்க:  இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த தொடரில் 4 அரை சதம் அடித்த விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா 3853 ரன்கள் உடன் உள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  விராட் கோலியின் 200-வது அரைசதம் இதுவாகும்.

    இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர். இதையடுத்து வரும் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India Vs England, T20 World Cup, Virat Kohli