ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மைதானத்தில் பாய்ந்து பறந்து பீல்டிங் செய்த விராட் கோலி! இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள விராட் வீடியோஸ்!.

மைதானத்தில் பாய்ந்து பறந்து பீல்டிங் செய்த விராட் கோலி! இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள விராட் வீடியோஸ்!.

இணையத்தில் வைரலாகும் விராட் கோலி வீடியோ

இணையத்தில் வைரலாகும் விராட் கோலி வீடியோ

இந்த போட்டியில் விராட் கோலி அருமையாக பீல்டிங் செய்யும் வீடியோ தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி செய்த பீல்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டேபார் 16-ம் தேதி தொடங்கியது. சூப்பர் 12 போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.

  இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த  இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

  இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் ஆரோன் ஃபின்ச் இந்திய பந்துவீச்சை சிதறடித்து அரைசதம் கடந்தும் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது ஷமி கடைசி ஓவரை வீசினார். தனது முழு அனுபவத்தையும் வெளிபடுத்திய ஷமி 4 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். கடைசி 4 பந்துகளில் 4 விக்கெட்களை (ஒரு ரன் அவுட் உட்பட) ஆஸ்திரேலியா இழந்தது.

  இந்த போட்டியில் விராட் கோலி அருமையாக பீல்டிங் செய்து டிரெண்ட் ஆகியுள்ளார். ஹர்ஷல் படேல் வீசிய பந்தை தொட்டு விட்டு ரன் எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்  டிம் டேவிட்டை விராட் கோலி ரன் ஆவுட் செய்த விதம் ரசிகர்களை பூரிப்படைய வைத்தது. பந்தை எடுத்து பறந்து கொண்டே ஸ்டெம்பை நோக்கி வீசி ரன் அவுட் செய்த விராட் கோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  இதனையடுத்து கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்றாவது பந்தை தூக்கி அடித்த பேட் கம்மின்ஸ் கேட்சை அசல்டாக ஒரே கையில் பவுண்டரி லைனில் இருந்து பிடித்து அசத்தினார். விராட் கோலி செய்த ரன் அவுட் மற்றும் கேட்ச் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: T20 World Cup, Virat Kohli