ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. மஹியின் நட்பு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி!

தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. மஹியின் நட்பு குறித்து உருக்கமாக பேசிய விராட் கோலி!

எம்.எஸ்.தோனி -விராட் கோலி

எம்.எஸ்.தோனி -விராட் கோலி

உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் தோனி மட்டுமே என விராட் உருக்கம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என விராட் கோலி உருக்கமாக கூறியுள்ளார்.

  இந்திய அணியில் விராட் கோலி -தோனியின் நட்பு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை உதறியது பற்றிக் கூறும்போது, “நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், கடந்த காலத்தில் நான் விளையாடிய ஒருவரிடமிருந்து மட்டும் எனக்கு செய்தி வந்தது. அது எம்எஸ் தோனி. நிறைய பேர் என் நம்பரை வைத்திருக்கிறார்கள், நிறைய பேர் எனக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள், நிறைய பேர் என் விளையாட்டைப் பற்றி டிவியில் பேசுகிறார்கள். ஆனால் எனது எண்ணை வைத்திருந்தவர்களில் தோனியைத் தவிர வேறு யாரிடமிருந்தும் எனக்கு செய்தி வரவில்லை என அவர்களது நட்பு குறித்து உருக்கமாக பேசினார்.

  இந்த நிலையில் நேற்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி தோனி குறித்து பல்வேறு விஷயங்களை தற்போது மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய விராட் கோலி, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என தோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.

  இதையும் படிங்க:  விராட் கோலியின் கோட்டை அது... அரையிறுதியில் தட்டித்தூக்குமா இந்தியா? எகிறும் எதிர்பார்ப்பு!

  மேலும் தோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் தோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என தோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: MS Dhoni, Virat Kohli