Home /News /sports /

ட்விட்டரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

ட்விட்டரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

virat kholi

virat kholi

Virat Kohli | ட்விட்டரில் 50 மில்லியன் பேர் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு அவரது ஆட்டத்தின் மீது எழுந்த சர்ச்சையை அடுத்து டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். பின்னர் மூன்று ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காததால் பெரும் சர்ச்சை எழுந்தது.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய விராட் கோலி தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார். இந்த நிலையில் மேலும் விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிக பேர் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை 211 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். உலக அளவில் மெஸ்லி, ரொனோல்டோ  அடுத்ததாக அதிக பலோயர்ஸ் வைத்திருக்கும் மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற பெருமையை வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை: வலுவான இந்திய அணி அறிவிப்பு

    இதனால் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி ஒரு விளம்பரம் தொடர்பாக பதிவு செய்தால் கோடி கணக்கான ரூபாயை கொட்டி தருகிறது விளம்பர நிறுவனங்கள்.



     



    இந்த நிலையில் மற்றோரு சமூகவலைதளமான டிவிட்டரில்  50 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. கடந்த 2019 ஆம் ஆண்டு ட்விட்டர் கணக்கை தொடங்கிய விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

     
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Cricketer, Twitter, Virat Kohli, World record

    அடுத்த செய்தி