ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் பள்ளி சிறுவனாக இருந்தபோது விராட் கோலி பரிசு வாங்கினாரா... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உண்மையா?

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் பள்ளி சிறுவனாக இருந்தபோது விராட் கோலி பரிசு வாங்கினாரா... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உண்மையா?

விராட் கோலி -ரிஷி சுனக்

விராட் கோலி -ரிஷி சுனக்

பள்ளி பருவத்தில் சிறுவனாக இருக்கும் விராட் கோலிக்கு பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக் பரிசு வழங்குவதாக சிலர் வாழ்த்து தெரிவித்து வந்தது இணையத்தில் வைரலாக பரவியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பரிசு வாங்கினார் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  பிரிட்டன் நாட்டில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் நின்ற நிலையில், லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நிலவும் பொருளாதார சிக்கலை சமாளிக்க முடியாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் ஆட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.

  அதனையடுத்து ஆளும் கட்சியின் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கட்சியின் அதிக ஆதரவைப் பெற்று கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தேர்வாகினார். இன்று அவரை பிரிட்டன் மன்னர் சார்லெஸ் ரிஷி சுனக்-ஐ புதிய பிரதமராக நியமித்தார்.

  இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள ரிஷி சுனக்கிடம் பரிசு வாங்கியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  இதையும் படிங்க: அது நோ பால் தானா? கடைசி ஓவரில் ஏற்பட்ட பல குழப்பங்கள்: என்ன சொல்கிறது ஐசிசி ரூல்?

  இதனையடுத்து அந்த புகைப்படம் இருப்பது ரிஷி சுனக் கிடையாது அது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசீஷ் நெஹ்ரா என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் விளையாடிய போது டெல்லியில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு நெக்ரா பரிசு அளித்தபோது எடுத்த புகைப்படம் ஆகும். மேலும் இந்த புகைப்படத்தை இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

  இணையத்தில் வைரலான புகைப்படம் (விராட் கோலிக்கு பரிசு வழங்கிய நெக்ரா)

  ஆனால் இந்த புகைப்படத்தை வைத்து பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக்கிற்கு சிலர் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தது இணையத்தில் வைரலாக பரவியது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Rishi Sunak, Virat Kohli