8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரில் விராட் கோலி 4 அரை சதங்களுடன் 296 ரன்களை எடுத்து டி20 உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற்ற சூப்பர்-12 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி கொண்டிருந்தது. மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல கடுமையாக போராடினார்.
வலுவான பாகிஸ்தான் பந்துவீச்சை அசல்டாக எதிர்கொண்ட கோலி, 19 ஓவரில் ஸ்ட்ரெய்ட் மற்றும் லெக் திசையில் அடித்த இரண்டு சிக்சர்கள் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்கும் அளவுக்கு அதில் அப்படி ஒரு இன்னிங்சை விளையாடி இருபார்.
கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ரன்களை விளாசி இந்தியா ஒரு வரலாற்று வெற்றியை அடைய வழிவகுத்திருந்தார்.கோலியின் இந்த ஆட்டத்தை மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்
October 23rd 2022 will always be special in my heart. Never felt energy like that in a cricket game before. What a blessed evening that was 💫🙏 pic.twitter.com/rsil91Af7a
— Virat Kohli (@imVkohli) November 26, 2022
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு விராட் கோலி நெகிழ்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் “என் மனதில் எப்போதும் சிறப்பான நாளாக அக்டோபர் 23 இருக்கும்: ஒரு கிரிக்கெட் போட்டியில் அது போன்ற ஒரு ஆற்றலை இதுவரை நான் உணர்ந்ததில்லை என பதிவிட்டுள்ளார். இதனை கிரிக்கெட் ரசிகர்களும் நெகிழ்ந்து இந்த பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Pakistan, Melbourne, T20 World Cup, Virat, Virat Kohli