Home /News /sports /

களத்தில் இறங்கி விட்டால் கோலி ஒரு புலி, தோனி அப்படியல்ல- ஷோயப் அக்தரிடம் ரவி சாஸ்திரி

களத்தில் இறங்கி விட்டால் கோலி ஒரு புலி, தோனி அப்படியல்ல- ஷோயப் அக்தரிடம் ரவி சாஸ்திரி

தோனி-சாஸ்திரி

தோனி-சாஸ்திரி

இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகக் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை விட அமைதியான விவேகமான ஒரு வீரரைத் தான் பார்த்ததில்லை என்றும், உலகக் கோப்பையை வென்ற கேப்டன் தோனி களத்தில் கோபப்பட மாட்டார் என்றும் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
    இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகக் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை விட அமைதியான விவேகமான ஒரு வீரரைத் தான் பார்த்ததில்லை என்றும், உலகக் கோப்பையை வென்ற கேப்டன் தோனி களத்தில் கோபப்பட மாட்டார் என்றும் கூறினார்.

    ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலில் ரவி சாஸ்திரியிடம் அவர் உரையாடியதிலிருந்து...

    இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியைப் போல் ஒரு அமைதியான விவேகமான நபரை நான் பார்த்ததில்லை என்று பாராட்டியுள்ளார். தோனியின் தொலைபேசி எண் இன்னும் தன்னிடம் இல்லை என்று சாஸ்திரி கூறினார், தோனி விரும்பினால், தனது செல்போனை விட்டுக்கூட விலகி பல நாட்கள் இருக்க முடியும் என்றார்.

    ரவி சாஸ்திரி கூறியதாவது, “பூஜ்ஜியம் அடித்தாலும், சதம் அடித்தாலும், உலகக் கோப்பையை வென்றாலும், முதல் சுற்றில் தோற்றாலும் அவருக்கு எந்த வித்தியாசமும் இல்லை. நான் நிறைய கிரிக்கெட் வீரர்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் அப்படி யாரும் இல்லை. சச்சின் டெண்டுல்கர் கூட ஒரு அற்புதமான சுபாவம் கொண்டவர், ஆனால் அவர் சில சமயங்களில் கோபப்படுவார். ஆனால் தோனி அப்படி இல்லை.

    அவர் கையில் போன் இருப்பதை தவிர்க்க முடியுமானால், அவர் தவிர்த்து விடுவார். இன்று வரை அவன் நம்பர் என்னிடம் இல்லை. நான் அவருடைய எண்ணைக் கேட்டதில்லை. அவர் தனது தொலைபேசியை தன்னுடன் எடுத்துச் செல்வதில்லை என்பது எனக்குத் தெரியும். நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ள விரும்பினால், அவரை எவ்வாறு தொடர்புகொள்வது என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். அவர் அப்படிப்பட்டவர்.

    ஆனால் விராட் கோலி களத்தில் ஒரு மிருகம் போலதான். ஒருமுறை களத்தில் இறங்கியவுடன் போட்டி போடத்தான் ஆசைப்படுவார். வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆனால், மைதானத்திற்கு வெளியே கோலி முற்றிலும் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பவர்” என்றார் ரவி சாஸ்திரி.

    இப்போதைக்கு சாஸ்திரிக்குத் தேவை ஐபிஎல் தொடரிலோ அல்லது மீடியாவிலோ ஒரு வேலை என்பது நமக்குப் புரிகிறது
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dhoni, MS Dhoni, Ravi Shastri, Virat Kohli

    அடுத்த செய்தி