விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களது மகளின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் 11ம் தேதி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலி தனக்கு மகள் பிறந்ததை இன்ஸ்டாகிராமில் அறிவித்தது முதல் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இதை தொடர்ந்து விராட் கோலி - அனுஷ்கா சர்மா தங்களது மகளுக்கு வாமிகா என்று பெயர் வைத்துள்ளார். வாமிகா என்பது சமஸ்கிருதம் ஆகும். அதன் பொருள் கடவுள் துர்கை (Durga) என்பதை குறிக்கும்.
ஆங்கில எழுத்துகளில் விராட் கோலியின் முதல் எழுத்து v மற்றும் அனுஷ்காவின் கடைசி 2 எழுத்து ka என்பதை இணைத்து Vamika (வாமிகா) என்று வைத்துள்ளனர். எண் கணிதம் முறைப்படி இதன் கூட்டுத்தொகை 3 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பெயர் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது. அதே சமயம், இது பெற்றோருக்கு குழந்தை அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டிய ஒரு செல்வாக்குமிக்க பெயர். அவள் தந்தையின் குணங்களை பின்பற்றுவாள். ‘வாமிகா’ என்ற பெயர் வெற்றிகளையும் அமைதியையும் குறிக்கிறது. அவள் எங்கு சென்றாலும், அவள் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவாள். இந்த பெயர் வங்காளத்திலும் மலையாள கலாச்சாரங்களிலும் பிரபலமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் விராட் மற்றும் மகள் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் “காதல், நன்றி ஆகியவற்றுடன் நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த குட்டி வாமிகா மொத்தமாக வேறு ஒரு தளத்திற்கு எங்களை கொண்டு சென்றுவிட்டாள்.
கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம், சில நிமிடங்களில், சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்..தூக்கம் குறைவாக உள்ளது. ஆனால், எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் அனைவரின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நல்ல ஆற்றல் ஆகியவற்றிற்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.
அனுஷ்காவின் இந்த பதிவிற்கு, “எனது மொத்த உலகமும் ஒரே பிரேமில் உள்ளது” என விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.